உலக சிட்டுக்குருவிகள் நாள்; சிட்டுக்குருவிகளுக்கு பிறந்த நாள் கொண்டாடும் குடும்பம்

இன்று உலகம் முழுவதும் சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்படுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 20, 2022, 09:40 AM IST
  • இன்று உலகம் முழுவதும் சிட்டுக்குருவி தினம்
  • 2010 ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.
  • நூற்றுக்கணக்கான குருவிகள் ஜெயராம் ராவ் வீட்டில் வாழ்கின்றன.
உலக சிட்டுக்குருவிகள் நாள்; சிட்டுக்குருவிகளுக்கு பிறந்த நாள் கொண்டாடும் குடும்பம் title=

உலக சிட்டுக்குருவிகள் நாள் ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010 ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.

மனிதரைச் சுற்றியுள்ள பொதுவான உயிரியல் பல்வகைமை மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறவும் இந்நாள் பயன்படுகிறது. இன்று உலகம் முழுவதும் சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லி அரசு கடந்த 2012-ம் ஆண்டு சிட்டுக்குருவியை தங்கள் மாநில பறவையாக அங்கீகரித்தது. 

மேலும் படிக்க | பாண்டா குட்டிக்கு புட்டி பால் கொடுத்த ஊழியர்! வைரலாகும் வீடியோ!

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சக்கரேநாடு மண்டியாவில் உள்ளது சிட்டுக்குருவி பிரியர் குடும்பம். ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள கஞ்சம் பகுதியைச் சேர்ந்த ஜெயராம் ராவ் குடும்பத்தினர் தான் அவர்கள். சிட்டுக்குருவிகளை பாதுகாக்க அவைகளுக்கு வீட்டில் பிவிசி பைப்பில் நூற்றுக்கணக்கான கூடுகள் உருவாக்கியுள்ளனர்.

சிட்டுக்குருவிகள் இயற்கை சூழலை அனுபவிக்க சிறிய தோட்டம் மற்றும் ஒரு சிறிய நீர்வீழ்ச்சியையும் அவர்களது வீட்டில் உருவாக்கி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் வந்த சிட்டுக்குருவிகள் வீட்டுச் சூழளுக்கு பழக்கமடைந்த பிறகு அவைகள் இங்கேயே தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கத்துவங்கிய நிலையில் இன்று நூற்றுக்கணக்கான குருவிகள் ஜெயராம் ராவ் வீட்டில் வாழ்கின்றன. 

தினமும் குருவிகள் சாப்பிட விரும்பும் தீனீ வைத்து பராமரித்து வரும் அவர் குடும்பத்தினர். ஒவ்வொரு ஆண்டும் உலக சீட்டு குருவி தினத்தை அவர்கள் வீட்டில் குழந்தைகள் மற்றும் அண்டை வீட்டாருடன் கேக் வெட்டி கொண்டாடுகின்றனர்.

மேலும் படிக்க | ஆற்றை அந்தரத்தில் கடக்கும் கோழி - Viral Video

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News