கொரோனாவின் புதிய வேரியண்ட் எக்ஸ்இ பல நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், தற்போது இந்த மாறுபாட்டின் நோயாளிகள் நம் நாட்டின் 2 மாநிலங்களில் (குஜராத் மற்றும் மும்பை) கண்டறியப்பட்டுள்ளனர். மும்பையில் எக்ஸ்இ மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கண்டுபிடித்ததாக பிஎம்சி கூறியுள்ளது. அதேபோல் குஜராத்தில் ஒருவருக்கு புதிய வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவிட் 19 இன் எக்ஸ்இ மாறுபாடு குறித்து மக்கள் மனதில் பல கேள்விகள் உள்ளன. ஏனெனில் இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி இந்த மாறுபாடு மிக வேகமாக பரவுகிறது. இதனால் நாட்டில் பரவும் கொரோனாவின் நான்காவது அலையாக இதை மக்கள் கருதுகின்றனர்.
இந்த மாறுபாடு எப்படி இருக்கிறது
கோவிட்-19 எக்ஸ்இ என்பது ஓமிக்ரானின் 2 துணைப்பிரிவுகளான பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகியவற்றின் மறுசீரமைப்பு விகாரமாகும். அதன் அறிக்கைகளில், உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி இந்த மாறுபாட்டை கொரோனாவின் பிஏ.2 மாறுபாட்டை விட 10 சதவீதம் அதிக தொற்று என்று விவரித்துள்ளது. ஆனால் எக்ஸ்இ மாறுபாடு சற்று லேசனதாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த வைரஸைத் தவிர்க்க, அதன் அறிகுறிகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
மேலும் படிக்க | அதிசயம் ஆனால் உண்மை! ‘இந்த’ நாடுகளில் நுழைய முடியாமல் கொரோனா தோற்று போனது!
XE இன் அறிகுறிகள் என்ன?
மருத்துவரின் கூற்றுப்படி, எக்ஸ்இ மற்றும் ஓமிக்கிரான் மாறுபாட்டின் அனைத்து அறிகுறிகளும் ஒரே மாதிரியானவை. எக்ஸ்இ மாறுபாடு கிட்டத்தட்ட 3 மாதங்களாக உலாவி வருகிறது மற்றும் ஆனால் இது ஓமிக்கிரான் போன்ற உலகம் முழுவதும் இன்னும் பரவவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சில நிபுணர்களின் கூற்றுப்படி, 'எக்ஸ்இ மாறுபாட்டின் அறிகுறிகள் ஓமிக்கிரான் மாறுபாட்டிலிருந்து வேறுபட்டவை என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.'
இருப்பினும் இந்த அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்காமல் இருக்க வேண்டும் - சோர்வு, சோம்பல், காய்ச்சல், தலைவலி, உடல்வலி, நரம்புத் தளர்ச்சி, இதயம் தொடர்பான பிரச்சனைகள்.
மேலும் படிக்க | Immunity Booster: நோய் எதிர்ப்பு சக்தி உணவு குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR