எச்சரிக்கை: கொரோனா உங்கள் தொலைபேசியிலிருந்தும் பரவலாம்....

கழிப்பறை இருக்கையை விட 3 மடங்கு அழுக்கோடு காணப்படுகிறது நமது ஸ்மார்ட்போன்கள். 

Last Updated : Mar 13, 2020, 02:16 PM IST
எச்சரிக்கை: கொரோனா உங்கள் தொலைபேசியிலிருந்தும் பரவலாம்.... title=

ஒரு மொபைல் போன் கொரோனா வைரஸையும் (Corona Virus) பரப்ப முடியுமா? கேள்வி கொஞ்சம் தீவிரமானது, ஆனால் முக்கியமானது. மொபைல் தொலைபேசிகளிலிருந்தும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எங்கள் சகாவான ஜீபிஸின் கூற்றுப்படி, ஒரு மருத்துவ விஞ்ஞானி கொரோனா வைரஸ் எங்கிருந்தும் மக்களுக்கு பரவக்கூடும் என்று எச்சரித்துள்ளார். 

ஒரு அறிக்கையின்படி, உங்கள் ஸ்மார்ட்போனின் திரையை மீண்டும் மீண்டும் தொடூவீர்கள் என்றால், உங்கள் முகத்தைத் தொடுவதற்க்கு முன் உங்கள் கைகளை நன்கு கழுவுங்கள். ஏனெனில், உங்கள் ஸ்மார்ட்போனின் திரையில் இருந்து கூட, கொரோனா வைரஸ் உங்களுக்குள் நுழையக்கூடும். கொரோனா வைரஸ் உயிரற்ற மேற்பரப்பில் சுமார் 1 வாரம் உயிர்வாழும். இது மனித உடலில் இருந்து கபம் அல்லது தும்மல் வடிவத்தில் வெளியே வருகிறது. வைரஸ் தொற்றுநோய்க்கான அதிக ஆபத்து பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பு கொண்டது.

ஃபோர்டிஸ் மருத்துவமனையின் டாக்டர் ரவிசங்கர் ஜா கூறுகையில், ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒரு சானிடைசர் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனை சுத்தம் செய்ய வேண்டும். நீங்கள் தொடர்ந்து தொலைபேசியைப் பயன்படுத்தினால், அதை உங்கள் வாய் அல்லது முகத்தில் கொண்டு வருவதைத் தவிர்க்கவும்.

2018 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, உங்கள் ஸ்மார்ட்போன் ஒரு கழிப்பறை இருக்கையை விட 3 மடங்கு அழுக்காகும். Insurance2Go இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சியின் படி, 20 பேரில் ஒருவர் மட்டுமே 6 மாதங்களில் தங்கள் மொபைல் போனை சுத்தம் செய்கிறார்.

Trending News