ஐபிஎல் 2018: சென்னை vs டெல்லி வெற்றிப்பெற போவது யார்?

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 30_வது லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 30, 2018, 05:50 PM IST
ஐபிஎல் 2018: சென்னை vs டெல்லி வெற்றிப்பெற போவது யார்?  title=

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 30_வது லீக் போட்டியில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதுவரை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றியையும், 2 தோல்வியையும் பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடைசியாக இந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியிடம் சிஎஸ்கே 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை அணியை பொருத்த வரை பேட்டிங் மற்றும் பவுலிங் சிறப்பாக உள்ளது.

அதேபோல டெல்லி அணி தான் விளையாடிய  7 போட்டிகளில் 2-ல் வெற்றிப்பெற்று, 5-ல் தோல்வியை தழுவியுள்ளது. நான்கு புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. டெல்லி அணியின் தொடர் தோல்வியால் கவுதம் கம்பீர் கேப்டன் பதிவை ராஜினமா செய்ததை அடுத்து, புதிய கேப்டனாக பதவியேற்ற ஸ்ரேயாஸ் ஐயர், கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இன்றைய போட்டியிலும் தங்கள் அணிக்கு வெற்றியை பெற்று தருவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்பில் உள்ளனர்.

இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் 11 வெற்றியும், டெல்லி டேர்டெவில்ஸ் 5 வெற்றியும் பெற்றுள்ளது.

இரு அணிகளும் வெற்றிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Trending News