IPL 2018: டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு

இன்றைய போட்டி இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : May 16, 2018, 08:00 PM IST
IPL 2018: டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு title=

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் மும்பை அணி தனது பேட்டிங்கை தொடங்க உள்ளது. 

 

 


IPL 2018 தொடரின் இன்று 50_வது போட்டியில் பஞ்சாப் அணி மற்றும் மும்பை அணி மோத உள்ளன. இந்த போட்டி இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

12 ஆட்டங்களில் விளையாடி உள்ள மும்பை அணி 5-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் என 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கடைசியாக கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியுற்றது. இதனால் இன்றைய ஆட்டம் மும்பை அணிக்கு மிக முக்கிய ஆட்டம் ஆகும். பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், இன்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று, அடுத்து டெல்லி அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி உள்ளது. ஒருவேளை இன்று நடைபெறும் போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்தால், ஐபில் 11_வது சீசனில் இருந்து வெளியேறும்.

 

 

12 ஆட்டங்களில் ஆடி உள்ள பஞ்சாப் அணி 6-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் என 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. கடைசியாக கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வியுற்றது. இதனால் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு வந்தது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், இன்றைய ஆட்டத்திலும், அடுத்து நடக்கும் சென்னை டெல்லி அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் போதும்.

 

 

எனவே இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும். இதுவரை ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மும்பை அணி 11 வெற்றியும், பஞ்சாப் அணி 10 வெற்றியும் பெற்றுள்ளது. அதேபோல இன்றைய போட்டி நடக்கவிருக்கும் வான்கடே மைதானத்தில் மும்பை 3 வெற்றியும், பஞ்சாப் 4 வெற்றியும் பெற்றுள்ளது.

 

 

இன்றைய போட்டி இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

Trending News