IPL 2018 தொடரின் 31-வது போட்டியில் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிப் பெற்றது!
IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.
இத்தொடரின் 31-வது போட்டியில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் மோதின. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வெளியேறினர். மனன் வோரா 45(31) ரன்களில் வெளியேற மெக்கலம் 37(25) மற்றும் விராட் கோலி 32(26) ரன்களில் வெளியேறினர். இந்நிலையில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழக்க தடுமாற்றத்துடன் விளையாடினர். எனினும் ஹார்திக் பாண்டயா நிதானமாக விளையாடி 50(42) ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக குர்ணல் பாண்டயா 23(19) ரன்கள் குவித்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதனால் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியினை அடுத்து பெங்களூரு அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னை அணி முதலிடத்திலும், ஐதராபாத் இரண்டாம் இடத்திலும் உள்ளது....