IPL_2018: ஹைதராபாத் அணியை சிதைத்தது CSK!!

நான்கு ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது சென்னை அணி!! 

Last Updated : Apr 22, 2018, 07:52 PM IST
IPL_2018: ஹைதராபாத் அணியை சிதைத்தது CSK!!  title=

கொல்கத்தா: ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை அணி 4 ரன்கள் என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..! 

11-வது ஐபிஎல் போட்டியின் 20-வது லீக் ஆட்டம் நடந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் பொதுவாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 4 மணிக்கு துவங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோதினர். 

அதில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அம்பதி ராயுடு மிகவும் அதிரடியாக ஆடி, 37 பந்தில் 79 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸ், 9 பவுண்டரி அடக்கம். அதேபோல் ரெய்னா அதிரடியாக ஆடி, 43 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி அடக்கம். கடைசி நேரத்தில் டோணியும் அதிரடி காட்டி 12 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். இதில் 1 சிக்ஸ், 3 பவுண்டரி அடக்கம். இதனால் சென்னை அணி 20 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து ஹைதராபாத் அணிக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயத்தது. இந்நிலையில், ஹைதராபாத் 178 ரன்களை மட்டுமே எட்டியது. 

நான்கு ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது சென்னை அணி..! 

Trending News