Jesus Bible Stories: இரக்கமுடையவர்கள் இரக்கம் பெறுவார்கள்!!

இன்றைய 'பைபிள்' செய்தியில் இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்! அவர்கள் இரக்கம் பெறுவார்கள் என்னும் வசனம் இடம் பெற்றுள்ளதை பற்றி பார்போம்!!  

Last Updated : Apr 21, 2018, 03:23 PM IST
Jesus Bible Stories: இரக்கமுடையவர்கள் இரக்கம் பெறுவார்கள்!! title=

உலகம் போற்றும் கிறிஸ்தவர்களின் புனித நூலான 'பைபிள்' இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. 

இயேசு கிறிஸ்து பிறப்புக்கு முன்னர் உள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் 'பழைய ஏற்பாடு' எனவும், இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்குப் பின்னர் நிகழ்ந்தவை எல்லாம் 'புதிய ஏற்பாடு' எனவும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. 

இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை உணர்த்தும் விதமாக அவர் வாழ்ந்து காட்டிய வழிகள் உலகில் உள்ள மக்கள் அனைவரையும் நல்வழிபடுத்தும் ஊற்றாக இந்த நூல் அமைகின்றது.

புதிய ஏற்பாட்டில் உவமைகளாகவும் உருவகங்களாகவும் அவர் மூலமாகா தெரிவிக்கப்பட்ட 'பைபிள் கதைகள்' அனைத்தும் உலக மக்களால் பெரிதும் விரும்பிப் போற்றப்படுபவையாகும்.

இந்த கதையின் மூலம் இயேசு கிறிஸ்து மக்களை நல்வழி படுத்த உவமையாக கூறிய சில குறிப்புகளை பற்றி பார்போம்....!! ஒருநாள் ராஜா ஒருவர் தனது அரசாங்க கணக்கு வழக்குகளைப் சரி பார்ப்பவரை அழைத்து யார் யார்? தனக்கு எவ்வளவு கடன் தரவேண்டும் என்று வினவினார்?

பின்னர், தன்னிடம் கடன் பெற்றவர்களிடம் வசூல் செய்து கொண்டுவர அரசாங்க சேவகர்களையும் அனுப்பி வைத்தார்.

கடன் வசூலிக்கக் கிளம்பிப் போனவர்கள், நடுத்தரமான குடும்பத்தைச் சேர்ந்த 100 தங்கக் காசுகள் தரவேண்டி ஒருவனைப் பிடித்து அழைத்து வந்தார்கள். 

நீண்ட நாள்களாகியும் அவன் கடன் தொகையைத் தராமல் இழுத்தடித்தான். இது ராஜாவுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. 

உடனே, ராஜாவானவர் அவனது சொத்துகளை எல்லாம் விற்று, தன்னுடைய கடனை அளிக்க அவனுக்கு ஆணையிட்டார்.

அந்த நபர், ராஜாவின் அரசாங்கத்தில் ஒரு பணியாளன் என்பதால் ராஜாவின் கால்களில் விழுந்து, தன்னையும் தனது கடனையும் மன்னிக்கும்படி வேண்டினான். 

பின்னர், ராஜா அவன்மீது இரக்கம் கொண்டு, அவனது கடனை மன்னித்து அவனை விடுவித்தார்.

ஆனால், அந்தப் பணியாளனோ தனது வீட்டுக்குப் போகும் வழியில் தன்னை விட ஏழ்மை நிலையில் இருந்த மற்றொரு வறியவரை அழைத்து. 

நீ என்னிடம் வாங்கிய 20 வெள்ளிக்காசுகளை உடனே தந்துவிட்டு மறுவேலையைப் பார் எனக் கூறி மிரட்டிக் கொண்டிருந்தான். 

அரசாங்கப் பணியாளனின் கால்களில் விழுந்து அந்த மனிதன் கதறினான். ஆனால், இவனோ அந்த வேலைக்காரனுக்கு மனம் இரங்கவில்லை. 

இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அரசாங்கப் பணியாளனைப் பிடித்து இழுத்துக்கொண்டுபோய் அரசரிடம் கொண்டுபோய் விட்டனர்.

அப்போது அரசர், பொல்லாத ஊழியக்காரனே நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி அவன் என்னிடம் பட்ட கடனை எல்லாம் தனக்குக் கொடுத்துத் 
தீர்க்குமளவும் அந்த நபர் உபாத்திரவம் கொள்ள அவனை ஒப்புக்கொடுத்தான். 

இது குறித்து இயேசு கிறிஸ்து பாக்கியவான்கள் யார் என்பதை பைபுளில் உவமைகளாக குறிப்பிடுகையில்....!

>இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்! அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

>ஆவியில் எளிமையுள்ளவர்கள், பாக்கியவான்கள்! பரலோக ராஜ்யம் அவர்களுடையது.

>துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்! அவர்கள் ஆறுதலடைவார்கள்.

>சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்! அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

>நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்! அவர்கள் திருப்தியடைவார்கள்.

>இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்! அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

எனவே, அனைவரும் எல்லோரையும் சகோதரர்களாக எண்ணி அன்பாயிருக்க வேண்டும். இந்த ஆண்டில் எவருடனாவது சண்டை ஏற்பட்டால், அவருடன் சமதானமாகிவிட்டு கிறிஸ்துவை வணங்கவேண்டும்.

Trending News