வெற்றி எங்களுக்கே! நம்பிக்கையில் 100% மெஜாரிட்டி காட்டும் பாஜக! காங்கிரஸ்!

கர்நாடக சட்டப்பேரவையில் 100% பெரும்பான்மையை நாங்கள் பெறுவோம் என பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன!

Updated: May 19, 2018, 10:27 AM IST
வெற்றி எங்களுக்கே! நம்பிக்கையில் 100% மெஜாரிட்டி காட்டும் பாஜக! காங்கிரஸ்!
Zee News Tamil

கர்நாடக சட்டப்பேரவையில் 100% பெரும்பான்மையை நாங்கள் பெறுவோம் என பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன! 

இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா..!

நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதவீதம் கண்டிப்பாக பெரும்பான்மையை நிரூபிப்பேன். மாலை 5 மணிக்கு பா.ஜ., தொண்டர்கள் வெற்றியை கொண்டாடுவர். கர்நாடக மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகள் பற்றிய அனைத்து முடிவுகளும் நாளை எடுக்கப்படும் என்றார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் மூத்த தலைவர் சதானந்த கவுடா..! 

நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி பெறுவது உறுதி என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார். 

காங் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறும்போது..! 

பா.ஜ.,வுக்கு போதிய எண்ணிக்கை இல்லை. அதனால் நாங்கள் தான் நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெறுவோம். பா.ஜ., தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க இப்போது தான் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அதில் அவர்கள் தோல்வியை தான் சந்திப்பார்கள் என்றார். 

 

காங்., குலாம் நபி ஆசாத்.., எம்எல்ஏ.,க்கள் எண்ணிக்கை பா.ஜ..,வுக்கு எதிராக உள்ளது. எங்களுக்கு தான் அந்த எண்ணிக்கை சாதமாக உள்ளது. எம்எல்ஏ.,க்களும் எங்களுக்கு ஆதரவாக தான் உள்ளனர். நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று மாறி மாறி நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.,,,,,