இந்தியா முழுவதும் அனைத்து அவசர சேவைக்கும் ஒரே உதவி எண் அறிமுகம்!!

அனைத்து அவசர சேவைகளுக்கும் ஒரே உதவி அழைப்பு எண்ணாக 112 என்ற எண், தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது! 

Last Updated : Feb 19, 2019, 04:06 PM IST
இந்தியா முழுவதும் அனைத்து அவசர சேவைக்கும் ஒரே உதவி எண் அறிமுகம்!! title=

அனைத்து அவசர சேவைகளுக்கும் ஒரே உதவி அழைப்பு எண்ணாக 112 என்ற எண், தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது! 

காவல் துறையை அழைக்க 100, தீயணைப்புத்துறைக்கு 101, சுகாதாரத்துறைக்கு 108, பெண்கள் பாதுகாப்புக்கு 1090 என்பன உட்பட பல்வேறு சேவைகளுக்கு பல்வேறு உதவி அழைப்பு எண்கள் உள்ளன. இந்நிலையில், அனைத்து அவசர சேவைகளுக்கும் ஒரே உதவி அழைப்பு எண்ணாக 112 என்ற எண், ஏற்கனவே ஹிமாச்சலப் பிரதேசம், நாகாலாந்தில் வழக்கத்தில் உள்ள நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும், மும்பையிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

மேலும், 112 இந்தியா என்ற மொபைல் செயலியையும் உள்துறை அமைச்சகம் கூகுள் ப்ளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஸ்டோரிலும் அறிமுகப்படுத்துகிறது. இந்த செயலியில் ஆபத்துக்குள்ளாகும் பெண்கள், அருகாமையில் உள்ள பதிவு பெற்ற தன்னார்வலர்களை உதவிக்கு அழைக்கும் வகையில், அபாய ஒலி எழுப்பும் வசதியும் இடம் பெற்றுள்ளது. 112 ஹெல்ப் லைனின் பதற்ற கால அவசர அழைப்பு வசதியும் அறிமுகப்படுத்துகிறது. 

ஸ்மார்ட் ஃபோன்களில் பவர் பட்டனை அடுத்தடுத்து மூன்று முறை அழுத்தினாலோ, சாதாரண செல்ஃபோன்களில் 5 அல்லது 9 என்ற எண்களை நீண்ட நேரம் அழுத்தினாலோ அவசரகால அழைப்பு மையத்துக்கு தகவல் சென்று விடும். அவசரகால அழைப்பு மையத்தில் உள்ள பயிற்சி பெற்ற ஊழியர்கள் காவல்துறை, தீயணைப்புத்துறை சுகாதார உதவிக் குழுக்களை தொடர்பு கொண்டு அவசர சேவைகளை உடனடியாக மேற்கொள்ள வழிவகை செய்வார்கள்.

 

Trending News