7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு GOOD NEWS.. அடுத்த ஆண்டு முதல் அதிக சம்பளம்

2021 ஜூன் மாதத்திற்குப் பிறகு, டி.ஏ. மூலம் அரசாங்கம் நிவாரணம் அளிக்கக்கூடும் என மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நம்புகிறார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 15, 2020, 05:33 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது.
  • ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் சம்பளம் உயரப்போகிறது.
  • இது குறித்த நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என பலத்த எதிர்பார்ப்பு.
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு GOOD NEWS.. அடுத்த ஆண்டு முதல் அதிக சம்பளம் title=

புதுடெல்லி: புதிய ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரப்போகிறது. 2021 ஆம் ஆண்டில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கப் போகிறது. COVID-19 காரணமாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் அகவிலைப்படி நிறுத்தப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் 21 சதவீத விகிதத்தில் அகவிலைப்படியைப் பெறுகிறார்கள். ஆனால் இப்போது அது 17 சதவீதத்தில் கிடைக்கிறது.

ஜூன் 2021 வரை இப்படி இருக்கும்

2021 ஜூன் வரை மத்திய அரசு இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. கொரோனா (Coronavirus) நெருக்கடியில் பொருளாதார நடவடிக்கைகள் இயங்காததால், மத்திய அரசு அகவிலைப்படியை நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ​​இந்த கொடுப்பனவு 17 சதவீத வீதத்தில் வழங்கப்படுகிறது.

ஆனால் அதிகரிப்புக்குப் பிறகு, அது 21 சதவீத வீதத்தில் வழங்கப்படவிருந்தது. எனினும் கொரோனா தொற்று காரணமாக இதை தற்காலிகமாக மோடி அரசு நிறுத்தியுள்ளது.

55 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்கள் மீது தாக்கம்

2021 ஜூன் மாதத்திற்குப் பிறகு, டி.ஏ. மூலம் அரசாங்கம் நிவாரணம் அளிக்கக்கூடும் என மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நம்புகிறார்கள். அப்படி நடந்தால் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் இரண்டும் அதிகரிக்கும். மத்திய அரசு ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் டி.ஏ.-வை அதிகரிக்கிறது. இந்த ஆண்டு ஜனவரியில் 4 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டது. தற்போது, ​​இது 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் 55 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசுடன் இன்னும் என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

மார்ச் மாதத்தில் DA 4% அதிகரித்துள்ளது

முன்னதாக மார்ச் மாதத்தில், அமைச்சரவை அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரித்தது. வழக்கமாக, விலை உயர்வை ஈடுசெய்ய அரசாங்கம் ஆண்டுக்கு இரண்டு முறை டி.ஏ. –வை மாற்றும். இது அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்கான மற்றொரு முயற்சியாகும்.

முன்னதாக, அமைச்சர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 30% குறைப்பு அறிவிக்கப்பட்டது. COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கு அதிக நிதி ஒதுக்க அமைச்சர்களின் MPLAD கள் திட்டமும் இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி அரசு புத்தாண்டு பரிசை வழங்கியது

தேசிய தலைநகரான டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) அரசாங்கம் இந்த ஆண்டின் இறுதியில் தொழிலாளர்களுக்கு பரிசை வழங்கியுள்ளது. தொழிலாளர்களின் அகவிலைப்படியை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவே வழங்கியுள்ளார்.

ALSO READ: Ration Card Application: ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ரேஷன் கார்டை பெறுவது எப்படி

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News