நிரந்தர கணக்கு எண் (பான்) என்பது வருமான வரித் துறையால் வழங்கப்படும் பத்து இலக்க தனித்துவமான ஆல்ஃபாநியூமெரிக் எண்ணாகும். நமது நாட்டில் இது மிகவும் முக்கியமான நிதி ஆவணமாக உள்ளது. வருமான வரித்துறையால் வழங்கப்படும் இந்த லேமினேட் செய்யப்பட்ட பிளாஸ்டிக் அட்டை 'பான் கார்டு' என்று பிரபலமாக அறியப்படுகிறது.
ஆனால் இந்த முக்கியமான ஆவணத்தை நீங்கள் ஏதோ ஒரு சூழலில் இழந்துவிட்டால், அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. புதிதாக தொடங்கப்பட்ட வருமான வரி இணையதளம் சில நிமிடங்களில் இ-பானை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியை அளிக்கின்றது.
இ-பானை எவ்வாறு பதிவிறக்குவது என்பது குறித்த படிப்படியான வழிகாட்டி இதோ:
1. வருமான வரி இணையதளமான https://www.incometax.gov.in/iec/foportal-ல் லாக் இன் செய்யவும்.
2.. இப்போது 'இன்ஸ்டன்ட் இ பான்' என்பதைக் கிளிக் செய்யவும்.
3. அடுத்து, 'நியூ இ பான்' என்பதைக் கிளிக் செய்யவும்.
4. பின்னர் உங்கள் பான் எண்ணை உள்ளிடவும்.
5. உங்கள் பான் எண் உங்களுக்கு நினைவில் இல்லை என்றால், உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
மேலும் படிக்க | PAN card: ‘இந்த’ தவறுக்கு ₹10,000 அபராதம் விதிக்கப்படலாம்!
6. இங்கு பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை கவனமாகப் படித்துவிட்டு 'அக்செப்ட்' என்பதைக் கிளிக் செய்யவும்.
7. இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஓ.டி.பி வரும், அதை உள்ளிடவும்.
8. இப்போது கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் படித்த பிறகு 'கன்ஃபர்ம்' செய்யவும்.
10. பின்னர் உங்கள் பான், உங்கள் மின்னஞ்சல் ஐடிக்கு பி.டி.எஃப் வடிவத்தில் அனுப்பப்படும்.
11. இங்கிருந்து உங்கள் 'இ-பான்'-ஐ பதிவிறக்கம் செய்யலாம்.
இதன் தொடர்புடைய செய்தியாக, ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசித் தேதி 31 மார்ச் 2022 என்பதையும் நினைவில் கொள்ளவும். இந்த காலக்கெடுவுக்குள் இந்த பணியை செய்துமுடிக்கத் தவறினால், இரண்டு விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.
- உங்கள் பான் அட்டை செயல்படாமல் போகலாம்.
- தாமதத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படலாம்.
ஆகையால், இந்த பணியை இன்னும் செய்து முடிக்காதவர்கள், உடனடியாக இதை செய்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க | இனி ரயில் நிலையத்தில் ஆதார், பான் கார்டு பெறலாம்: இந்தியன் ரயில்வே அதிரடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR