ஏர்இந்தியாவிற்கு ரூ.300 கோடி இழப்பு! காரணம் இதுவே!

பாகிஸ்தான் வான்வெளியில் ஏர் இந்தியா விமானங்கள் பறக்க தடை விதித்த பின்னர் ஏர் இந்தியாவிற்கு ரூ.300 கோடி இழப்பு நேரிட்டுள்ளது.

Last Updated : Apr 30, 2019, 04:36 PM IST
ஏர்இந்தியாவிற்கு ரூ.300 கோடி இழப்பு! காரணம் இதுவே! title=

பாகிஸ்தான் வான்வெளியில் ஏர் இந்தியா விமானங்கள் பறக்க தடை விதித்த பின்னர் ஏர் இந்தியாவிற்கு ரூ.300 கோடி இழப்பு நேரிட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. இதனையடுத்து இருநாடுகள் இடையே பதற்றம் நேரிட்டது. இதனால் பாகிஸ்தான் தன்னுடைய வான்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதித்தது. 

மேலும் ஏர்இந்தியாவிற்கு எரிபொருள்,  பணியாளர்கள் மற்றும் விமான சேவை எண்ணிக்கை குறைப்பு ஆகியவற்றால் நாளொன்றுக்கு ரூ. 6 கோடி இழப்பு நேரிட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தை நாடியுள்ள ஏர் இந்தியா நிறுவனம், இழப்பினை ஈடுபட்ட நிதி வழங்குமாறு கேட்டுகொண்டுள்ளது. ஏர்இந்தியா தொடர்பு கொண்டதை ஒப்புக்கொண்ட விமான போக்குவரத்து அமைச்சகம், ஏர் இந்தியாவின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

Trending News