Google Pay, Paytm, PhonePe பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

உங்கள் பின் நம்பரை யாருடனும் பகிர்ந்துகொள்ள கூடாது, அவ்வாறு பின்களை நீங்கள் பகிர்ந்துகொள்வது சில சமயம் நீங்கள் மோசடிகளில் சிக்கிவிட வழிவகுக்கும்.    

Written by - RK Spark | Last Updated : Nov 27, 2022, 07:43 AM IST
  • யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது.
  • கடந்த நிதி ஆண்டில் அதிக யுபிஐ பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
  • பல மோசடிகளும் இதன் மூலம் நடைபெறுகிறது.
Google Pay, Paytm, PhonePe பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!  title=

ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வது, பரிவர்த்தனை செய்வது போன்ற செயல்முறைகள் அதிகரித்து வருகிறது, அதிலும் குறிப்பாக கொரோனாவிற்கு பின்னர் இந்தியாவில் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்யும் போக்கு அதிகரித்திருக்கிறது.  Google Pay, Paytm, Phone Pe போன்ற பல செயலிகளை நமது ஸ்மார்ட்போன்களில் டவுன்லோடு செய்து வைத்துக்கொண்டு எளிமையாக பரிவர்த்தனை செய்யலாம்.  இதுபோன்ற செயலிகளை பயன்படுத்துவது எளிமையானது தான் என்றாலும் இதிலுள்ள மோசடிகளிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள சில ட்ரிக்ஸுகளை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.  சமீபகாலமாகவே ஆன்லைன் மோசடிகள் அதிகம் நடைபெற்று வருகிறது, தவறுதலாக நீங்கள் ஒரு லிங்கை க்ளிக் செய்துவிட்டால் கூட உங்கள் கணக்கில் உள்ள மொத்த பணமும் காலி ஆகிவிடக்கூடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ள உங்களிடம் இருக்க வேண்டியது குறிப்பிட்ட செயலியுடன் கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் வங்கி கணக்கு ஆகியவை மட்டும் தான்.  இந்த யூபிஐ செயலிகள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கே காண்போம்.

மேலும் படிக்க | 7th Pay Commission:ஊழியர்களுக்கு புத்தாண்டில் எக்கச்சக்க பரிசுகள் 

1) ஸ்க்ரீன் லாக் என்பது அவசியமான ஒன்று, உங்கள் மொபைல்களுக்கு மட்டும் ஸ்க்ரீன் லாக் போட்டு வைக்காமல் உங்கள் மொபைலிலுள்ள அனைத்துவிதமான பேமெண்ட் செயலிகளுக்கும் ஸ்க்ரீன் லாக் போட்டுவைக்க வேண்டியது அவசியமாகும்.  மேலும் பாஸ்வேர்டாக உங்களது பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பர் போன்ற எளிதில் கண்டறியக்கூடியவற்றை போடுவதை தவிர்க்க வேண்டும்.

2) உங்கள் பின் நம்பரை யாருடனும் பகிர்ந்துகொள்ள கூடாது, அவ்வாறு பின்களை நீங்கள் பகிர்ந்துகொள்வது சில சமயம் நீங்கள் மோசடிகளில் சிக்கிவிட வழிவகுக்கும்.  அந்த பின் நம்பரை வைத்து உங்கள் கணக்கிலுள்ள பணத்தை மோசடிக்காரர்கள் கொள்ளையடித்து விடுவார்கள்.  அப்படி உங்களது பின் நம்பர் பிறருக்கு தெரிந்துவிட்டதாக நீங்கள் உணர்ந்தால் உடனடியாக பின் நம்பரை மாற்றிவிடுங்கள்.

3) போலியான லிங்குகள் அல்லது போலியான அழைப்புகள் வந்து உங்களை ஏமாற்றி மோசடி வலையில் சிக்க வைக்கிறது.  அதுபோன்று உங்கள் மொபைலுக்கு அதிகாரபூர்வமற்றதாக அனுப்பப்படும் லிங்குகளை நீங்கள் க்ளிக் செய்தால் உங்கள் கணக்கிலுள்ள பணம் பறிபோய்விடும்.  சிலர் கால் செய்து தாங்கள் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஓடிபி நம்பர் கேட்பது, பின் நம்பர் கேட்பது அல்லது சில செயலிகளை மொபைல்களில் டவுன்லோடு செய்ய சொல்வது என சில மோசடிகளை செய்கின்றனர், இதுபோன்ற அழைப்புகளை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

4) யூபிஐ செயலிகளை பயன்படுத்துபவர்கள் அனைவரும் அடிக்கடி செயலிகளை அப்டேட் செய்துகொள்ள வேண்டும், அப்டேட் செய்யும்போது உங்களுக்கு பலவித புதிய அம்சங்கள் கிடைக்கிறது.

5) உங்கள் மொபைலில் அதிகளவிலான பேமெண்ட் செயலிகளை வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும், பிளே ஸ்டோரில் நம்பகமானதாக உள்ள செயலிகளை மட்டும் டவுன்லோடு செய்து வைத்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க | 7th pay commission: 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய முக்கிய அப்டேட் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News