Amazon Great Indian Festival: சலுகை, தள்ளுபடி Smartphone முதல் Headphone வரை

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை திருவிழாவில் முதல் முறையாக அதிக சலுகை மற்றும் தள்ளுபடி அளிக்கப்பட உள்ளனர். எதிர்பார்ப்பில் மக்கள்...!!

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 23, 2019, 07:00 PM IST
Amazon Great Indian Festival: சலுகை, தள்ளுபடி Smartphone முதல் Headphone வரை title=

புது தில்லி: ஈ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் தனது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனை செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 நள்ளிரவு 12 மணிக்கு வரை இருக்கும். இந்த சலுகைக்கான காலகட்டத்தில், பல பொருட்களுக்கு அதிக தள்ளுபடிகள் வழங்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு ஷாப்பிங் செய்ய திட்டமிட்டால், இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். இங்கிருந்து உங்களுக்கு பிடித்த தயாரிப்புகளை மிகக் குறைந்த விலையில் வாங்க முடியும். எப்பொழுதும் வழக்கமாக வழக்கும் சலுகைகளை விட, இந்த சலுகையில் அதிக அளவில் தள்ளுபடி இருக்கும். ஆப்பிள் ஸ்மார்ட்போன் தொடங்கி வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வருகின்றனர். இந்த சிறந்த விழா விற்பனையில் பற்றிய தகவல்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை: இந்த விழாவில் முதலில், பயனாளர்களுக்கு எஸ்பிஐ (SBI) டெபிட் கார்டில் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி மற்றும் போனஸ் சலுகை வழங்கப்படும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். மேலும் பிரைம் பயனர்களுக்கான (Prime members) இந்த விற்பனை செப்டம்பர் 28 மதியம் 12 மணி முதல் தொடங்கிவிடும்.

சலுகை விவரங்கள்: இந்த தள்ளுபடி விழாவில், விவோ, ஒன்பிளஸ் டிவி, லெனோவா மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் உட்பட பல மொபைல் போனின் புதிய மாடல் அறிமுகங்கள் இடம் பெற உள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் முதலில் வாங்கும் பொருட்களுக்கு ரூ.100 கூடுதல் கேஷ்பேக் (Cash Back) வழங்கப்படும். எந்தவொரு டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் தவணை முறையில் பொருட்களை வாங்குவோருக்கு கூடுதல் வரி (No Cost EMI) கிடையாது. மேலும் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். 

ஸ்மார்ட்போன் ஒப்பந்தங்கள்: சமீபத்திய மற்றும் சிறந்த ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். அதனுடன் ஈ.எம்.ஐ, எக்ஸ்சேஞ்ச், சலுகை மற்றும் இலவச திரை மாற்று சலுகையும் வழங்கப்படும். 

மடிக்கணினி ஒப்பந்தங்கள்: விற்பனையில், பயனர்களுக்கு மடிக்கணினியில் ரூ.40,000 வரை தள்ளுபடி வழங்கப்படும். கூடுதலாக, 12 மாதங்கள் வரை தவணை முறையில் வாங்கலாம். அவர்களுக்கு ஈ.எம்.ஐ வரி கிடையாது அதே நேரத்தில், ஃபிட்னஸ் டிராக்கர்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களை ரூ.799 ஆரம்ப விலையில் வாங்கலாம். அதே நேரத்தில், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்களை 60 சதவீதம் தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த விற்பனையின் போது கேமராக்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கும்.

Trending News