எல்-சாவி காலத்தைச் சேர்ந்த தனித்துவமான கல்லறை எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது!

கொரோனா வைரஸ்  நெருக்கடிக்கு மத்தியில் ஒரு பெரிய தொல்பொருள் கண்டுபிடிப்பை மேற்கொண்டு அதில்  எகிப்து வெற்றியும்  பெற்று விட்டது.  அந்நாட்டின்  தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று  26-வது வம்சம் என்று அழைக்கப்படும் எல்-சாவி காலத்தைச் சேர்ந்த ஒரு தனித்துவம் கொண்ட  கல்லறையை கண்டுபிடித்துள்ளது.

Last Updated : May 28, 2020, 03:12 PM IST
எல்-சாவி காலத்தைச் சேர்ந்த தனித்துவமான கல்லறை எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது!  title=

கொரோனா வைரஸ்  நெருக்கடிக்கு மத்தியில் ஒரு பெரிய தொல்பொருள் கண்டுபிடிப்பை மேற்கொண்டு அதில்  எகிப்து வெற்றியும்  பெற்று விட்டது.  அந்நாட்டின்  தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று  26-வது வம்சம் என்று அழைக்கப்படும் எல்-சாவி காலத்தைச் சேர்ந்த ஒரு தனித்துவம் கொண்ட  கல்லறையை கண்டுபிடித்துள்ளது.

எகிப்தில் மிகவும் பிரபலமான தொல்பொருள் நிறைந்த  பகுதிகளான மினியா கவர்னரேட்டில் அமைந்துள்ள பஹ்னாசா பிராந்தியத்தில் உள்ள கல்லறையை பார்சிலோனா பல்கலைக்கழகத்துடன் இணைந்து,  எகிப்திய-ஸ்பானிஷ் தொல்பொருள்  நிறுவனம்  கண்டுபிடித்ததாக அதன்  பொதுச்செயலாளர் மொஸ்தபா வஜீரி அறிவித்தார்.

READ | எகிப்தில் தொடரும் மூடநம்பிக்கை; 12 வயது சிறுமி பரிதாப பலி!

வஜீரியின்  கருத்துப்படி, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்லறையில் ,  மெருகூட்டப் பட்ட  சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்ட ஒரு அறை உள்ளது.   சுவர்  கூரையின் மேற்புறத்தில்  ஒரு வளைவான அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது கல்லறைக்கு ஒரு தட்டையான தோற்றத்தை அளிக்கிறது. இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பிற கல்லறைகளும்   பாதுகாக்கப்பட்டுள்ளன எனபது இங்கே குறிப்பிடத்தக்கது. . கல்லறையில் இறுதி சடங்கு  நடந்ததற்கான எந்த அடையாளமும்  இல்லை என்றும் வஜீரி ஊடகங்களிடம் கூறினார்.

இந்த  கூட்டு திட்டத்தின்   தலைவரான எஸ்தர் போன்ஸ்,  ரோமானிய காலத்திற்கு முந்தைய எட்டு கல்லறைகள்,  ஒரு குவிமாடம் மற்றும் செதுக்கப்படாத கூரையுடன் இருப்பதை  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்  கண்டறிந்துள்ளனர் என்று கூறினார். இந்த கல்லறைகள் ரோமானிய கல்லறைகள்.  இவற்றில்  வெண்கல நாணயங்கள், சிறிய சிலுவைகள் மற்றும் களிமண் முத்திரைகள்  இருந்தன. .

எகிப்திய சுற்றுலா மற்றும் தொல்பொருள் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சோஹா பஹ்காட்,   இன்று   அல்-மானிட்டர் பஹ்னாசாவாஸ் என்று அழைக்கப்படும்,  ஹெலனிஸ்டிக் காலங்களில்  ஆக்ஸிரைஞ்சஸ் (Oxyrhynchus)நகரம்  என்ற பெயரில் அழைக்கபட்டதாக   கூறினார்.  இதற்கு கூர்மையான மூக்கு உள்ள மீன்  என்று பொருள்.   "இஸ்லாமிய சகாப்தத்தில், பஹ்னாசா நகரம் இஸ்லாமிய வெற்றிகளை  குறிக்கும் விதமாக,  நகர ஆளுநரின் மகள் பஹா எல்-நேசாவின் பெயரிடப்பட்டது," என்று அவர் கூறினார்.

READ | 5,000 ஆண்டுகள் பழமையான பீரை கண்டுபிடித்த இஸ்ரேல் விஞ்ஞானி!

ரோமானிய காலத்தில் பஹ்னாசா ஒரு முக்கிய நகரமாக இருந்தது என்றும் அப்போது 30,000 க்கும் மேற்பட்ட துறவிகள் இங்கு வசித்து வந்தனர் என்றும் பஹட் கூறினார். "19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 50,000 க்கும் மேற்பட்ட தகவல் பட்டயங்களை (papyri)கொண்ட ஒரு முழுமையான காப்பகம் நகரத்தில்  இயங்கி வந்தது. ," என்றும்  தெரிவித்தார். பஹ்காட்டின் கூற்றுப்படி, தொல்பொருள் அகழ்வாராய்ச்சி 2008 இல் தொடங்கியது.   பிறகு   எகிப்திய-ஸ்பானிஷ்  திட்டத்தின் குழுவினர்  ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மட்ப்ரிக் தேவாலயத்தின் இடிபாடுகளையும் கண்டுபிடித்தனர் .

நாட்டின் பாதுகாப்பு நிலைமை கருத்தில்கொண்டு  2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் அதாவது இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் 2013 ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடைந்தன.  இதில்  ஒரு பிரார்த்தனை அறை, ஒரு துறவியின் அறை, ஒரு சாப்பாட்டு அறை, ஒரு சமையலறை மற்றும் பயிர்கள் சேமிக்கும் பகுதி ஆகியவற்றின்  செங்கல் சுவர்களின் எச்சங்கள்  அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டன.  இது இந்த ஆராய்ச்சியில் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

(மொழியாக்கம் - அருள்மொழி அழகர்சாமி)

Trending News