கண்கலங்கிய விராட்... முத்தமிட்டு ஆறுதல் அளித்த அனுஷ்கா... வைரலாகும் வீடியோ

அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில்விராட் கோலிக்கு முத்தமிட்டு ஆறுதல் கூறிய அவரது மனைவி.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Sep 13, 2019, 04:38 PM IST
கண்கலங்கிய விராட்... முத்தமிட்டு ஆறுதல் அளித்த அனுஷ்கா... வைரலாகும் வீடியோ
Pic Courtesy: Yogen Shah

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் அவரின் அழகான மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் சமீபத்தில் புதுதில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்களின் ஜோடி அனைவரையும் கவர்ந்தது. அந்த நிகழ்ச்சியில் அனுஷ்கா, அவரது கணவனின் கையில் முத்தமிட்ட அந்த தருணம் மிகவும் சிறந்ததாக இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பிசிசிஐ-யின் நிர்வாகியாக இருந்த மறைந்த முன்னால் அமைச்சர் அருண் ஜெட்லியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று இரவு டெல்லி கிரிக்கெட் வாரியம் சார்பாக புகழ்பெற்ற ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் கலந்துக்கொண்டனர். 

 

அப்பொழுது விராட் கோலியின் தந்தை பற்றி நினைவுகூறும் போது, கோலியின் கண்கள் கலங்கின. அந்த தருணத்தில் விராட்டின் கரங்களை பிடித்து முத்தம் கொடுத்து, அவருக்கு அனுஷ்கா ஷர்மா ஆறுதல் கூறினார். இந்த காட்சியை பார்த்தவர்கள் அனைவரும் நெகிழ்ச்சியடைய செய்தது. அந்த காணொளியை நீங்களும் பாருங்கள்...!!