ரூ.4,600-க்கு விற்கப்படும் வாட்டர் பாட்டில்! அப்படி என்ன ஸ்பெஷல்?

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ரூ.4,600 விலை மதிப்பில் வாட்டர் பாட்டில் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 29, 2022, 10:17 AM IST
  • ஆப்பிள் அறிமுகப்படுத்திய விலை உயர்ந்த வாட்டர் பாட்டில்.
  • இந்தியாவில் 4600க்கு விற்பனை.
  • அதிக தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரூ.4,600-க்கு விற்கப்படும் வாட்டர் பாட்டில்! அப்படி என்ன ஸ்பெஷல்? title=

இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனம் அதன் பல சிறப்பான தயாரிப்புகளை களமிறக்கி வருகிறது, அந்த வகையில் தற்போது ஒரு அற்புதமான வாட்டர் பாட்டிலை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த வாட்டர் பாட்டிலின் விலை ரூ.4,600 ஆகும்.  ரூ.1900 மதிப்புள்ள பாலிஷிங் துணியை அறிமுகப்படுத்திய பிறகு அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் ஹைட்ரேட் ஸ்பார்க் என்கிற வாட்டர் பாட்டில் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.  இந்த ஹைட்ரேட் ஸ்பார்க் வாட்டர் பாட்டில் ஆப்பிளின் அதிகாரபூர்வ இணையதள பக்கம் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் ரூ.4,600க்கு கிடைக்கிறது.

water

மேலும் படிக்க | டிவிட்டர் கொக்கக் கோலா மெக்டோனால்ட் அடுத்து என்ன வாங்கப் போறீங்க எலோன் மஸ்க்

ஆனால் இந்த வாட்டர் பாட்டில் தற்போது அமெரிக்காவில் மட்டும் தான் பரவலாக கிடைக்கிறது.  இது சிறப்பு வாய்ந்த வாட்டர் பாட்டிலாக கருதப்படுகிறது, இது தினசரி நமது உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை, நாம் எவ்வளவு நீர் அருந்துகிறோம் என்பது குறித்து கண்காணிக்கிறது, இது ஆப்பிள் ஹெல்த் உடன் இணைந்து இயங்குகிறது.  ஐபோன்களை போலவே இந்த இந்த வாட்டர் பாட்டில் இரண்டு விதமாக கிடைக்கிறது, ஒன்று ஹைட்ரேட் ஸ்பார்க் ப்ரோ மற்றும் ஹைட்ரேட் ஸ்பார்க் ப்ரோ ஸ்டீல் ஆகும், இவற்றின் விலைகள் முறையே  $59.95 மற்றும் $79.95 ஆகும்.

water

ஹைட்ரேட் ஸ்பார்க் ப்ரோ வாட்டர் பாட்டில் கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் கிடைக்கிறது, ஹைட்ரேட் ஸ்பார்க் ப்ரோ ஸ்டீல் சில்வர் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கிறது.  வாட்டர் பாட்டிலின் கீழ்ப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள எல்இடி சென்சார் நாம் தண்ணீர் எடுத்துக்கொள்ளும் அளவு குறித்து புளூடூத்துடன் இணைக்கப்பட்ட ஆப்பிள் ஹெல்த் மூலம் நமக்கு தெரியப்படுத்துகிறது.  இதே போல உலகளவில் நம்மை வியக்க வைக்கும் விலையில் சில வாட்டர் பாட்டில்கள் உள்ளன.   ரூ.65 லட்சம் விலை மதிப்பில் பிவர்லி ஹில்ஸ் ஹெச்2ஓ டயமண்ட் எடிஷன் வாட்டர் பாட்டில், ரூ.45 லட்சம்  விலை மதிப்பில் அக்வா டி க்ரிஸ்டல்லோ ட்ரிபுடோ எ மோடிக்லியாணி மற்றும் பிலின்க் ஹெச்2ஓ வாட்டர் பாட்டில், ரூ.1.32 லட்சம் விலை மதிப்பில் நெவாஸ் வாட்டர் பாட்டில் ரூ.90,000 விலை மதிப்பில் ஃபில்லிகோ  போன்ற உயர் ரக வாட்டர் பாட்டில்கள் உலகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | Beat the Heat:கோடை வெயிலை கூலாக்கி சூரியனுக்கே சேலஞ்ச் விடும் T-Shirt AC

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News