சூரியனின் மாற்றத்தால் இவர்களுக்கு கெட்ட நேரம்: பண இழப்பு ஏற்படும், எச்சரிக்கை தேவை

Astrology: ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களின் அரசனாகக் கருதப்படும் சூரிய பகவான், சனியின் ராசியான மகர ராசியில் இருந்து விலகி கும்ப ராசியில் பிரவேசிக்க உள்ளார். இந்த மாற்றம் 5 ராசிக்காரர்களுக்கு அசுபமானதாக கருதப்படுகின்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 8, 2022, 12:54 PM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் தொழில், பணியிடத்தில் பல சவால்கள் வரலாம்.
  • கும்ப ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் பெரிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.
சூரியனின் மாற்றத்தால் இவர்களுக்கு கெட்ட நேரம்: பண இழப்பு ஏற்படும், எச்சரிக்கை தேவை title=

சூரியன் தான் பூமியின் அஸ்திவாரமாய் விளங்குகிறது. சூரியனின் மூலம்தான் பூமியில் ஜீவன் வாழ்கிறது. ஜோதிடத்திலும் சூரியனை மிக முக்கியமான கிரகமாகக் கருதி, கிரகங்களின் அரசன் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் சூரியனின் நிலையில் ஒரு சிறிய மாற்றம் கூட மக்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

தற்போது சூரிய பகவான் தனது மகன் சனியின் ராசியில், அதாவது மகர ராசியில் இருக்கிறார். பிப்ரவரி 13 அன்று தனது மகன் சனிக்கு சொந்தமான இரண்டாவது ராசியில் அதாவது கும்ப ராசியில் நுழைகிறார். அவர் ஒரு மாதம் இந்த ராசியில் இருப்பார். குரு பிரஹஸ்பதி ஏற்கனவே கும்பத்தில் இருக்கிறார். ஆகையால், சூரியன் கும்ப ராசியில் (Zodiac Sign) நுழைவது வியாழனை அஸ்தமிக்கச் செய்யும். இந்த நிலை 5 ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களைத் தரும்.

இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் 

கடகம் (Cancer): கடக (Cancer) ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் நிதி இழப்பை ஏற்படுத்தும். இதனால் பணப் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். விலை உயர்ந்த ஒரு பொருளை இழக்கும் நிலையும் ஏற்படலாம். ஆகையால் இந்த காலகட்டத்தில் மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 
 
சிம்மம் (Leo): சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் தொழில், பணியிடத்தில் பல சவால்கள் வரலாம். சில இழப்புகளும் ஏற்படலாம் அல்லது கடின உழைப்பின் பலன் எதிர்பார்த்தபடி கிடைக்காமல் போகலாம். இக்கட்டான சூழ்நிலையில் மனம் தளராமல் பொறுமையாக இருங்கள். பொறுமை ஒன்றே இந்த நேரத்தில் உங்களுக்கு கை கொடுக்கும்.

ALSO READ | இந்த 4 ராசிக்காரர்களுக்கு காதலர் தினம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்

விருச்சிகம் (Scorpio): விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் தனிப்பட்ட வாழ்க்கையில் சிரமங்களைத் தரும். குறிப்பாக, வேலை-வாழ்க்கை சமநிலையை உருவாக்கத் தவறிவிடுவீர்கள். இதனால் வீட்டில் பிரச்சனைகள் ஏற்படலாம். பதற்றம் அதிகரிக்கலாம். பணியிடத்திலும் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். அனைத்து இடங்களிலும் மிக எச்சரிக்கையாகவும் கவனமாகவும் செயல்படுவது நல்லது. 

மகரம் (Capricorn): மகர ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரத்தால் நிதி இழப்பு ஏற்படும். இது உங்கள் நிதி நிலையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். முதலீடும் நஷ்டத்திற்கு வழிவகுக்கும். வீட்டில் பணப் பிரச்னை ஏற்படும். பணப் பரிமாற்றம், நிதி நிலைகள் குறித்த எந்த விதமான முடிவை எடுப்பதற்கும் முன்பும் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. 

கும்பம் (Aquarius): கும்ப (Aquarius) ராசிக்காரர்கள் இந்தக் காலகட்டத்தில் பெரிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். தவறான முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தும். குருவில் அஸ்தம நிலையும் அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்புகளை குறைக்கும். மொத்தத்தில், இந்த நேரத்தில் பொறுமையாக இருந்து மிகவும் கனவனாக அனைத்து பணிகளையும் செய்வது நல்லது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | சூரியன்+செவ்வாய்+சுக்கிரன் கூட்டணி! அமோக நன்மை பெறும் ராசிக்காரர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News