இந்த 4 ராசிக்காரர்களுக்கு காதலர் தினம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்

4 ராசிக்காரர்களுக்கு காதலர் வாரம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இந்த வாரம் காதல் நிறைந்ததாக இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 8, 2022, 09:31 AM IST
  • காதலர் வாரம் தொடங்கியது
  • இந்த ராசிக்காரர்களுக்கு இந்த காதல் வாரம் மிகவும் ஏற்றது.
  • காதல் ஜோடிகள் மீது அன்பு மழை பொழியும்
இந்த 4 ராசிக்காரர்களுக்கு காதலர் தினம் மிகவும் சிறப்பானதாக இருக்கும் title=

புதுடெல்லி: காதலர் தினத்தை கொண்டாட காதல் ஜோடிகள் பல திட்டங்களை போட ஆரம்பித்துள்ளனர். ஆண்களும் பெண்களும் தங்கள் ஜோடிகள் ஆச்சரியப்படுத்த புதிய யோசனைகளைப் பற்றி சிந்திக்கிறார்கள். இந்த காதல் வாரம் ப்ரோபோஸ் டேயுடன் தொடங்கியுள்ளது. காதல் பறவைகளுக்கு, இந்த வாரம் முழுவதும் (பிப்ரவரி 8 முதல் பிப்ரவரி 14 வரை) ஒரு பண்டிகை போல் தென்படும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிகளின் காதல் ஜோடிகளுக்கு இந்த வாரம் அற்புதமானதாகவும் மறக்கமுடியாததாகவும் இருக்கும். அவர்களின் விவரத்தை அறிவோம்.

மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு (Zodiac Sign) இந்த காதலர் வாரம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். அவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள் மற்றும் அவர்களின் துணையிடமிருந்து சிறந்த பதிலைப் பெறுவார்கள். திருமணம் செய்து கொள்ள விரும்பும் தம்பதிகள் தங்கள் துணையை குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தலாம்.

ALSO READ | புதன் கிரகத்தால் இன்று முதல் பெரிய மாற்றம்: 4 ராசிக்காரர்கள் மீது நேரடி தாக்கம்

கடகம்: கடக ராசியை சேர்ந்த காதல் ஜோடிகளுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. நிச்சயதார்த்தம் நடக்கலாம். திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பார்கள். இது அவர்களின் உறவை பலப்படுத்தும். காதல் அதிகரிக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் அன்பு மழை பொழியும். காதல் மற்றும் திருமணமான தம்பதிகளின் உறவு பலப்படும். திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் சம்மதிக்காத தம்பதிகள் இப்போது ஒப்புக் கொள்ளலாம். சிங்கிள் ஆக இருப்பவர்களுக்கு ஒருவரின் முன் காதலை வெளிப்படுத்த இது ஒரு நல்ல நேரம்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அன்பான வாரம் மிகவும் இனிமையாக இருக்கும். சிங்கிள் ஆக இருப்பவர்கள் தங்கள் துணையை கண்டுபிடிக்க முடியும். தம்பதிகளிடையே காதல் அதிகரிக்கும்.

ALSO READ | Numerology: புதனின் பரிவர்த்தனையால் பணமழையில் நனையப் போவது நீங்களா?

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News