SBI ATM-ல் இப்படி பணம் எடுத்தால் இனி அபராதம்: ஜாக்கிரதை!!

அபராதத்தைத் தவிர்ப்பதற்கான முதல் வழி உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வதாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 6, 2021, 02:06 PM IST
  • SBI ஒரு புதிய விதியை வெளியிட்டுள்ளது.
  • நீங்கள் செய்யும் தவறால் உங்களுக்கு பண விரயம் ஏற்படும்.
  • சில விஷயங்களில் அதிகமான கவனம் தேவை.
SBI ATM-ல் இப்படி பணம் எடுத்தால் இனி அபராதம்: ஜாக்கிரதை!! title=

டெல்லி: ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்கும்போது, உங்கள் வங்கிக் கணக்கில் பண இருப்பு குறைவாக இருந்தால், உங்கள் பண பரிமாற்றம் நடக்க முடியாமல் போய்விடும். இதுவரை, கணக்கில் குறைவான பண இருப்பை வைத்திருக்கும் தவறு மன்னிக்கப்பட்டது. ஆனால் இனி SBI ATM-மிலிருந்து பணம் எடுக்கும்போது இந்த தவறு நடந்தால், அது உங்களுக்கு பிரச்சையாகிப் போகலாம்.

SBI-யின் புதிய விதிகளை அறிந்து கொள்ளுங்கள்

SBI-யின் புதிய விதிகளின்படி, உங்கள் கணக்கில் உள்ள தொகையை விட பெரிய தொகையை நீங்கள் SBI ஏடிஎம்மில் இருந்து எடுக்க முயற்சித்தால், ரூ .20 அபராதம் மற்றும் GST செலுத்த வேண்டும். நீங்கள் தெரியாமல் இந்த தவறை செய்தாலும், இந்த அபராதத்தை நீங்கள் கட்டிதான் ஆகவேண்டும். குறைந்த இருப்பு தவிர மற்ற எந்த காரணங்களினால் பரிவர்த்தனை தோல்வியுற்றாலும் SBI கட்டணம் வசூலிக்காது.

தண்டனையைத் தவிர்ப்பது எப்படி

அபராதத்தைத் தவிர்ப்பதற்கான முதல் வழி உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வதாகும். இந்த தகவல் உங்களிடம் இல்லை என்றால், கணக்கு நிலுவை அறிய SBI-யின் இருப்பு சோதனை சேவையைப் பயன்படுத்தவும். இதன் விவரங்களை SBI ட்வீட் மூலம் வழங்கியுள்ளது.

கஸ்டமர் கேர் எண்ணை அழைத்தும் நீங்கள் இந்த தகவலைப் பெற்றுக்கொள்ளலாம். ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுப்பதற்கு முன்பும் கணக்கில் மீதமுள்ள தொகை பற்றி தெரிந்துகொள்ளலாம். நீங்கள் ஆன்லைன் SBI-ஐ பயன்படுத்தினால், அங்கிருந்தும் இந்த தகவல்களைப் பெறலாம்.

ALSO READ: Bank Alert: உங்கள் வங்கியில் புதிய IFSC குறியீட்டை பெறவும்.. இல்லையெனில் பரிவர்த்தனை செய்ய இயலாது!

இது தவிர, கூகிள் பே அல்லது ஃபோன் பே (Phone Pe) செயலியிலும் பண இருப்பை சரிபார்க்க முடியும்.

SBI மெட்ரோ சிட்டி வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு 8 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் கிடைக்கும். SBI ஏடிஎம்களில் இருந்து 5 முறையும் மற்ற வங்கி ஏடிஎம்களில் இருந்து 3 முறையும் பணம் எடுக்கலாம். அதே நேரத்தில், மெட்ரோ அல்லாத நகர வாடிக்கையாளர்களுக்கு இந்த வரம்பு 10 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் ஆகும். எஸ்பிஐ ஏடிஎம்களில் இருந்து 5 மற்றும் பிற வங்கிகளின் ஏடிஎம்களில் (ATM) இருந்து 5 முறை இவர்கள் பணம் எடுக்க முடியும். இதைவிட அதிக முறை பணம் எடுத்தால், வங்கி கட்டணம் வசூலிக்கிறது.

கடந்த ஆண்டும் பெரிய விதிகள் மாறின

SBI செப்டம்பர் -2020 இல் ஒரு விதியை மாற்றியது. SBI ஏடிஎம்மிலிருந்து நீங்கள் 10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை எடுக்க வேண்டியிருந்தால், PIN-ஐ மட்டும் உள்ளிடுவது போதாது. வங்கியில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணில் ஒன் டைம் கடவுச்சொல் (OTP) வரும். அதையும் நீங்கள் உள்ளிட வேண்டும். அப்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 

ALSO READ: BSNL Rs 199 பிளானில் மாற்றம், இப்போது கிடைக்கும் இன்னும் அதிக பயன்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News