பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பஞ்ச்குலாவில் பணியிடம் இருக்கும் என்று கூறும் நிறுவனம், ப்ராஜெக்ட் மற்றும் டிரெய்னி இன்ஜினியர் பணிகளுக்கான காலியிடங்களுக்காக விண்ணப்பங்களை வரவேற்கிறது.
B.Tech பட்டம் பெற்றவர்களுக்கான பணி வாய்ப்பு இது. இந்த வேலைவாய்ப்பு, இந்திய இளைஞர்களுக்கானது. அதாவது வெளிநாட்டை சேர்ந்தவர்கள், இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.
அரசு வேலையைப் பெறுவதற்கான இந்த வாய்ப்பை தகுதியும், திறமையும் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் படிக்க | இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு - 1044 காலிப் பணியிடங்கள்
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான விவரங்கள்
திட்டம் மற்றும் பயிற்சி பொறியாளர் பணியிடத்திற்கான
முக்கியமான தேதிகள் மற்றும் அறிவிப்புகள்:
பதவியின் பெயர் - திட்டம் மற்றும் பயிற்சி பொறியாளர்
மொத்த காலியிடங்கள் - 55
விண்ணப்பிக்க கடைசி தேதி - 1-6-2022
பணியிடம் - பஞ்ச்குலா
பயிற்சி பொறியாளர் பதவிக்கான தகவல்கள்:
கல்வித்தகுதி: பொறியியல் பட்டப்படிப்பு (எலக்ட்ரானிக்ஸ் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங்)
வயது: அதிகபட்சம் - 38 ஆண்டுகள்
சம்பளம் - 30000
விண்ணப்பக் கட்டணம் - விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
தேர்வு செயல்முறை - நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்வு நடைபெறும்.
மேலும் படிக்க | அரசின் ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு!
பதவியின் பெயர் - திட்டப் பொறியாளர்
மொத்த காலியிடங்கள் - 17
விண்ணப்பிக்க கடைசி தேதி - 1-6-2022
பணியிடம் - பஞ்ச்குலா
கல்வித்தகுதி: பொறியியல் பட்டப்படிப்பு (சிவில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்)
வயது அதிகபட்சம் - 32 ஆண்டுகள்
சம்பளம் - 40000
விண்ணப்பக் கட்டணம் - விண்ணப்பக் கட்டணம் இல்லை.
தேர்வு செயல்முறை - https://zeenews.india.com/tamil/topics/vacancyவிண்ணப்பதாரர் தேர்வு நேர்காணலின் அடிப்படையில் நடைபெறும்.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தின் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்யலாம்.
விண்ணப்பப் படிவத்துடன் கல்வி மற்றும் பிற தகுதிகள், பிறந்த தேதி மற்றும் பிற தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்களின் நகல்களை இணைக்கவும். தகுதியின் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்புக்கான நல்ல வாய்ப்பு இது.
மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி தேர்வு ஜூலை 2 ஆம் தேதிக்கு மாற்றம்
BEL ஆட்சேர்ப்பு 2021 வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல்களைத் தெரிந்துக் கொள்ளவும்.
அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஒருமுறை கவனமாக சரிபார்த்து, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
மேலும் படிக்க | ஆயுர்வேத மருத்துவர்களுக்கான மத்திய அரசு பணி வாய்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR