குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை கிண்டல் செய்து வெளியிடப்பட்ட வீடியோவால் சாலை சீரமைப்பு பணிகள் தீவிரம்!!
நாம் அன்றாடம் காலையில் வேலைக்கு அவசரம் அவரசரமாக செல்லும் போது நம்மை பல்வேறு விஷயங்கள் பொறுமையை இழக்க செய்வது உண்டு. அதில், ஒன்றுதான் குண்டும் குழியுமாக இருக்கும் நமது பகுதி சாலை. அது நாம் அனைவருக்கு நன்றாக தெரிந்த ஓன்று. சாலையை சரி செய்ய கோரி நாம் எத்தனை மனு அளித்தாலும், அப்பகுதியில் எத்தனை விபத்துக்கள் நடந்தாலும் அதை யாரும் கண்டுகொள்வதும் இல்லை, செவி சாய்ப்பதும் இல்லை. நாமும் இந்த சாலை குறித்து யாரிடம் கூறினால் இதற்கான தீர்வு கிடைக்கும் என பல்வேறு கோணங்களில் யோசிப்பதும் உண்டு.
இந்நிலையில், குண்டும் குழியுமாக இருந்த சாலையி குறித்து ஒரு இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அந்த சாலையை உடனே அரசாங்கம் சரி செய்த சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த பிரபல ஓவியர் பாதல் நஞ்சுண்டசாமி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில் விண்வெளி வீரர் ஒருவர் வேற்று கிரகம் ஒன்றில் குண்டும் குழியுமாக இருக்கும் நிலத்தில் நடந்து செல்வது வீடியோவில் படம் பிடித்துள்ளனர்.
இதையடுத்து, அவர் நடந்து செல்லும் போது திடீரென ஆட்டோ மற்றும் கார்கள் அவரை கடந்தன. இதையடுத்துதான், தெரிய வந்தது அது வேற்று கிரகம் அல்ல நம்ம ஊர் சாலையின் நிலை என்று. செல்போனில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. லட்சக்கணக்கானோர் இதை பகிர்ந்துள்ளனர்.
இது குறித்து அறிந்த நகர கட்டுமான நிர்வாகத்தின் ஆணையர் அனில் குமார், சாலையை விரைவாக சரிசெய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து துங்கநகரில் சாலை மேம்பாட்டுப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி என்று ஓவியர் நஞ்சுண்டசாமி தெரிவித்துள்ளார்.
Thank you people for such a overwhelming response and support!
Work in progress.. Quick and prompt response from @BBMP. Thank you very much @BBMPCOMM @BBMP_MAYOR and Mr. Prabhakar, CE RR Nagar who is overlooking on ground currently. pic.twitter.com/clgoLAIKzU— baadal nanjundaswamy (@baadalvirus) September 3, 2019