Horoscope December 11, 2021: இன்றைய தினம் கும்ப ராசியிலும் மீன ராசியிலும் சந்திரன் பயணம் செய்கிறார். கடக ராசிக்காரர்களுக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. இன்று உங்களுக்கு ஒரு பெரிய ஆபத்து காத்திருக்கிறது. தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு இரவில் விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. அதன்படி இன்று 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பார்போம்.
மேஷம்: உங்களின் தகவல் தொடர்பு திறன் உச்சத்தில் இருக்கும். எனவே, எந்தவொரு புதிய முயற்சிக்கும் இது ஒரு நல்ல நேரம். பெரும்பாலான முயற்சிகளை வெற்றிகரமாக நிர்வகிப்பீர்கள்.
ரிஷபம்: உங்கள் எதிர்காலம் மற்றும் ஆரோக்கியம் குறித்து அதிக ஆர்வம் காட்டுவீர்கள், சரியான நபர்களிடம் ஆலோசனை செய்வீர்கள். பொருளாதார ரீதியாக பல நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையலாம். முதலீட்டுப் பார்வையில் நாள் சாதகமானது.
ALSO READ | சனி பெயர்ச்சி; அதிக அதிர்ஷ்டத்தைப் பெற உள்ள ராசிகள் எவை
மிதுனம்: இலக்கியம், கலை, எழுத்து, இசை, திரைப்படம் அல்லது விளையாட்டு போன்ற படைப்புத் துறைகளுடன் தொடர்புடையவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகளைப் பெறுவார்கள் மற்றும் இலாபகரமான ஒப்பந்தங்களைச் செய்யலாம். உங்களுக்கான புகழை பெறுவீர்கள். உங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் சாதகமான முன்னேற்றம் இருக்கும்.
கடகம்: சமூகக் கூட்டங்கள், உறவினர்கள் சந்திப்பு போன்றவற்றால் மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய தொடக்கங்களின் தீவிரம் காட்டுவீர்கள்.
சிம்மம்: பண வரவு குறைவாகவே இருக்கும். மேலும் இந்த சூழ்நிலையை சமாளிக்க கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது நல்லது. மூதாதையர் சொத்து சம்பந்தமாக ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் சுமுகமாக தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
கன்னி: சட்ட விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை. ரியல் எஸ்டேட் வியாபாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சமய காரியங்களில் செலவுகள் கூடும், இது உங்களுக்கு மன அமைதியை தரும்.
துலாம்: கலவையான பலன்களைக் கொண்ட காலமாக இருக்கும். தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்ளலாம் மற்றும் தற்போதைய திட்டங்களில் நீங்கள் தடைகளை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம் (Scorpio): உங்களில் சிலருக்கு பொருளாதார ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் லாபகரமான பயணங்கள் அமையும். இது உங்களுக்கு இனிமையான அனுபவமாக இருக்கும்.
தனுசு: அடிக்கடி தலைவலி மற்றும் வேறு சில நோய்களால் நீங்கள் பாதிக்கப்படலாம். உங்கள் மனைவியின் உடல்நிலையும் மோசமடையலாம். காயங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.
மகரம்: அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் உள்ளது, ஆனால் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். முடிந்தால், இரவில் வாகனம் ஓட்ட வேண்டாம். நீங்கள் பல விஷயங்களில் பணத்தை வீணடிக்கலாம், கவனமாக இருங்கள். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு சிறப்பான வேலையும் வெற்றியைத் தரும். வெளியூர் தொடர்பு உள்ளவர்களுக்கு திடீர் அனுகூலங்கள் கிடைப்பதுடன் பயணங்களும் கூடும்.
மீனம்: திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு உங்களுக்கு லாபகரமான பலன்களைத் தரும். சம்பளம் பெறுபவர்கள் பணியிடத்தில் தங்கள் பணி மற்றும் மனசாட்சிக்கு உரிய பாராட்டு மற்றும் மரியாதையைப் பெறலாம். நிதி ரீதியாக இது ஒரு நல்ல நாள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | Horoscope 2021 டிசம்பர் 10: இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் பிரச்சனை ஏற்படலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR