டிவி முதல் உணவு பொருள் வரை.. Flipkart வழங்கும் 50-80% தள்ளுபடி; மிஸ் பண்ணாதீங்க..!!!

தீபாவளி மற்றும் நவராத்ரி சமயத்தில் அதிரடி ஆபர்களை வழங்கிய ப்ளிப்கார்ட் நிறுவனம் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆபர்களை வழங்கியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 30, 2020, 08:55 PM IST
  • Flipkart நிறுவனம் இந்த மாதத்தின் மிகப்பெரிய தள்ளுபடிகள் நிறைந்த Flipstart Days- விற்பனையை அறிவித்துள்ளது.
  • பிளிப்கார்ட்டின் Flipstart Days விற்பனை நாளை தொடங்குகிறது
  • மின்னணு பாகங்கள் மீது அதிக தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன
டிவி முதல் உணவு பொருள் வரை.. Flipkart வழங்கும் 50-80% தள்ளுபடி; மிஸ் பண்ணாதீங்க..!!!  title=

தீபாவளி மற்றும் நவராத்திரி சமயத்தில் அதிரடி ஆபர்களை வழங்கிய ப்ளிப்கார்ட் நிறுவனம் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆபர்களை வழங்கியுள்ளது. நிறுவனம் இந்த மாதத்தின் மிகப்பெரிய தள்ளுபடிகள் நிறைந்த Flipstart Days- விற்பனையை அறிவித்துள்ளது.

 இந்த விற்பனையில் நீங்கள் அனைத்து வகையான பொருட்களுக்கும் பெரும் தள்ளுபடியைப் பெறலாம். உங்கள் தொலைபேசியில் பிளிப்கார்ட் (Flipkart) செயலி இருந்தால், Flipstart Days நேரலையில் சென்றுவிட்டதைக் காணலாம். டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3 வரை இந்த ஆபர் கிடைக்கும். இந்த 3 நாள் சலுகை திட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உணவு மற்றும் பானங்களுக்கு 70% தள்ளுபடி

ஃபிளிப்ஸ்டார்ட் டேஸ் (Flipstart Days) விற்பனையில் வாடிக்கையாளர்கள் உணவு மற்றும் பானங்கள் மீது 70% தள்ளுபடி பெறலாம். இது தவிர, குழந்தைகள் பராமரிப்பு பொருட்களுக்கும்  (Baby Care Essentials)  70% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மின்னணு பாகங்கள் ( Electronic Accessories) 50 முதல் 80 சதவீதம் தள்ளுபடி

பிளிப்கார்ட் வழங்கும் Flipstart Days  விற்பனையில், மடிக்கணினிகள் (Laptop), டி.வி போன்ற பொருட்களை மலிவு விலையில் வாங்கலாம். மின்னணு பாகங்கள் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். டிவி, ஏசி மற்றும் ஃப்ரிட்ஜ்களில் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.  ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு 70 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் க்ரூமிங் எசென்ஷியல்ஸில் 25% முதல் 60% தள்ளுபடி பெறலாம். இதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைக்கும். இதில், உடைகள், காலணிகள், அழகு பொருட்கள், வீட்டு அலங்காரங்கள் மற்றும் தினசரி பயன்பாடு போன்ற அனைத்து வகையான பொருட்களுக்கும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் வீட்டு உபயோகப் பொருட்களை ரூ .79 ஆரம்ப விலையில் வாங்கலாம். சமையலறை மற்றும் உணவுபொருட்களை ரூ .69 ஆரம்ப விலையில் வீட்டிற்கு கொண்டு வரலாம்.

ALSO READ |  சாலை போக்குவரத்து அமைச்சகம் மாற்றியுள்ள முக்கிய விதிகள்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News