செப்பு பாத்திரத்தில் எந்த வகை உணவு பொருட்களை வைக்க கூடாது!

பலரும் செப்புப் பாத்திரத்தில் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் செப்பு பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள சில உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

Last Updated : Oct 10, 2019, 10:26 PM IST
செப்பு பாத்திரத்தில் எந்த வகை உணவு பொருட்களை வைக்க கூடாது! title=

பலரும் செப்புப் பாத்திரத்தில் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் செப்பு பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள சில உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

பொதுவாக, செப்புக் பாத்திரங்களை பயன்படுத்துவதன் நன்மைகள் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் இன்று அதனால் ஏற்படும் சேதத்தைப் பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம். 

செப்புப் பாத்திரங்களை பயன்படுத்துவதால் உடல்நலக் குறைபாடு ஏற்படும் என்பதை நீங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் இவை அனைத்தையும் மீறி செப்பு பாத்திரத்தால் மக்கள் பாதிப்புள்ளாகுகின்றனர் எனவும் கூறப்படுகிறது. ஆனால் அனைத்து வகை உணவு பொருட்களும் நமக்கு தீங்கு விளைவிப்பதில்லை, சில உணவு பொருட்கள் செப்பு பாத்திரத்தில் வைத்து உண்பதால் நம் உடலுக்கு தீங்காய் அமையும் எனவும் கூறப்படுகிறது.

செப்புப் பாத்திரத்தில் வைக்கக் கூடாது, சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள் எவை என்பதை நாம் இங்கு பார்ப்போம். ஒரு செப்பு குடத்தில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் இந்த குடத்தில் எலுமிச்சை சாறு அல்லது ஷிகான்ஜி குடித்தால், அது மிகவும் தீங்கு விளைவிக்கும். எலுமிச்சையில் இருக்கும் இயற்கை சிட்ரிக் அமிலங்கள், தாமிரத்துடன் சேர்ந்து ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

வயிற்றை சரிசெய்யும் பாக்டீரியாவான லாக்டோபாகிலஸ் தயிரில் காணப்படுவது கவனிக்கத்தக்கது. ஆனால் அது ஒரு செப்புக் பாத்திரத்தில் சேமிக்கப்பட்டால், அது அதன் இயல்பின் எதிர் விளைவைக் காட்டத் தொடங்குகிறது. பால் அல்லது பால் சார்ந்த எந்தவொரு பொருளையும் செப்புக் பாத்திரத்தில் வைப்பதன் மூலம் அனைத்து ஊட்டச்சத்துக்களும் அழிக்கப்படுகின்றன. செப்பு பாத்திரத்தில் தயாரிக்கப்பட்ட பால் சாப்பிட்டால், வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று பிரச்சினைகள் உண்டாகுகின்றன.

ஒரு செப்பு பாத்திரத்தில் ஊறுகாய் போடுவது தாமிரத்துடன் இணைந்து விஷ ஊறுகாயை உருவாக்குகிறது. இதை சாப்பிடுவதால் வயிற்று எரிச்சல், அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஊறுகாய் ஒரு செப்பு பாத்திரத்தில் வைத்திருந்தால், அது விரைவில் மோசமடைகிறது. அதனால்தான் ஊறுகாய் மற்றும் பிற புளிப்பு பொருட்கள் ஒரு பீங்கான் பாத்திரத்தில் வைக்கப்படுகின்றன.

Trending News