ஆதார் அட்டையில் பழைய புகைப்படம் பிடிக்கவில்லையா? மாற்ற எளிய வழிகள்!

ஆதார் அட்டையில் இருக்கும் பழைய புகைப்படங்கள் பிடிக்காதவர்கள் சில வழிமுறைகளை பின்பற்றி புதிய புகைப்படங்களை பதிவேற்றிக்கொள்ளலாம்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 19, 2022, 06:37 PM IST
  • ஆதாரில் எளிதில் புகைப்படத்தை மாற்றலாம்
  • யுஐடிஏஐ தளத்தின் மூலம் மாற்றி கொள்ளலாம்
  • முழு தகவலையும் ஆதார் சரி பார்க்கும்
ஆதார் அட்டையில் பழைய புகைப்படம் பிடிக்கவில்லையா? மாற்ற எளிய வழிகள்! title=

தற்போது எல்லாவற்றிற்கும் ஆதார் அட்டைகள் தான் அதிகம் தேவைப்படுகிறது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியமானதாக உள்ளது.  மாநில மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் வழங்கும் பல சேவைகளைப் பெற ஆதார் அட்டை அவசியம்.  மேலும் தனியார் ஏஜென்சிகள் மற்றும் கடன் வழங்குபவர்களும் தற்போது வழங்க ஆதார் அட்டை விவரங்களை கேட்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்திற்கு, நீங்கள் இப்போது இருக்கும் தோற்றத்திற்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்கும். 

aadhar

மேலும் படிக்க | குறைந்த ரேஷன் கிடைக்கிறதா, இதைச் செய்யுங்க முதல்ல

அதனால் நீங்கள் இப்போது எவ்வித தோற்றத்தில் இருக்கிறீர்களோ அதற்கு ஏற்றார் போல பழைய புகைப்படத்தை அகற்றிவிட்டு புதிய புகைப்படத்தை மாற்றி கொள்ளலாம்.  மேலும் ஆதார் அட்டையில் புகைப்படத்தைப் புதுப்பிப்பதன் மூலம் நீங்கள் எவ்வித புது சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கலாம். 
ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி/வயது, பாலினம், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்றவை உள்ளன. யுஐடிஏஐ மக்களை ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை எளிதாக மாற்ற அனுமதிக்கிறது.  தற்போது ஆதார் அட்டையில் புகைப்படத்தை எவ்வாறு புதுப்பிக்கலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். 

aadhar

ஆதார் அட்டையில் புகைப்படத்தைப் புதுப்பிக்க, முதலில் யுஐடிஏஐ இணையதளத்தில் இருந்து ஆதார் பதிவு விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய வேண்டும்.  இப்போது அந்த விண்ணப்பத்தில் கேட்கப்படும் தேவையான விவரங்களை உள்ளிட வேண்டும்.  அடுத்ததாக ​​உங்கள் அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தில் பதிவு மைய நிர்வாகியைச் சந்தித்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும், பின்னர் அங்குள்ள நிர்வாகி ஒருவர் நீங்கள் அளித்தவற்றை அங்கீகரித்து உங்களை மீண்டும் புதிதாக புகைப்படம் எடுப்பார், இந்த ​​புகைப்பட புதுப்பிப்பு சேவைக்கு ரூ. 100 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து செலுத்த வேண்டும்.

அதன்பின்னர் யூஆர்என் கொண்ட ஒரு சீட்டு வழங்கப்படும், யூஆர்என்-ஐப் பயன்படுத்தி, UIDAI-ன் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் உங்கள் ஆதார் புதுப்பிப்பு பற்றிய தகவல்களை சரிபார்க்கலாம்.  மேலும் இந்த செயல்முறைக்கு கூடுதலாக ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.  உங்களது பயோமெட்ரிக் தகவல்களை பயன்படுத்தி உங்களின் முழுமையான விவரங்கள் ஆதார் பதிவு மைய நிர்வாகியால் சரிபார்க்கப்படும்.

மேலும் படிக்க | PAN Aadhaar Link: இது தான் கடைசி தேதி! அபராதத்தைத் தவிர்க்க உடனே இணைத்துவிடுங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News