வேக வைக்காத அரிசியை சாப்பிடும் பழக்கம் உள்ளதா? நீங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்

சில நேரங்களில் சின்ன விஷயம்தான் என நினைத்து உணவு உட்கொள்வதில் நாம் செய்யும் தவறு பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Written by - Dayana Rosilin | Last Updated : Jul 18, 2022, 04:47 PM IST
  • அரிசியை வேக வைக்காமல் உட்கொள்ளும் நபர்கள்
  • அதிர்ச்சியூட்டும் மருத்துவர்கள் கூறும் உண்மை
  • பிகா எனும் உணவு சீர்குலைவு பிரச்சனை ஏற்படும்
வேக வைக்காத அரிசியை சாப்பிடும் பழக்கம் உள்ளதா? நீங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் title=

தானிய வகைகளில் இன்றி அமையாத ஒன்று அரிசி. அனைவரின் பசியையும் ஆற்றும் இந்த அரிசி மீது பலருக்கும் ஒரு தனிப்பட்ட விருப்பம் இருக்கும். வீட்டில் சமையலரையில் அரிசியை பார்க்கும்போது வேகமாக கை அரிசியை எடுத்து வாயில் போட்டு மெல்ல ஆரம்பிக்கும். அந்த சுவைக்கு பலர் அடிமை என்றே கூறலாம். அரிசி நமது உணவு பொருள். அதை வேகவைத்து சாப்பிட்டால் என்ன வேக வைக்காமல் சாப்பிட்டால் என்ன சத்து ஒன்றுதானே என பலரும் நினைக்கலாம். ஆனால், பல தனிய வகைகளை நாம் பச்சையாக உண்ணலாம். அரிசி அப்படி அல்ல. இதை வேக வைக்காமல் சாப்பிட்டால் உடலுக்கு பெரும் ஆபத்தான விளைவுகளை கொண்டு வந்து சேர்க்கும்.

அரிசியை சாப்பிடும்போது வீட்டில் உள்ள பெரியவர்கள் அரிசிய பச்சையா திங்காத மந்தம் புடிச்சுக்கும்,சோகை ஆயிடுவ என திட்டுவார்கள். மேலும் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து இருக்கும் நபர்களை பார்த்து வீட்டில் உள்ள பெரியவர்கள் அவன் ஒரு சோகை என திட்டுவார்கள். சோகை என்றால் கெட்ட வார்த்தை அல்ல. ரத்ததில் ஏற்படும் இரும்பு சத்து குறைபாட்டையே சோகை எனவும் அதனால் ஏற்படும் உடல் சோர்வையே மந்தம் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

மேலும் படிக்க | தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் வரலாறும் பிண்ணனியும்: அண்ணா பெரியார் கலைஞர் கருணாநிதி

தொடர்ந்து ஒருவர் வேக வைக்காத அரிசியை அடிக்கடி உட்கொண்டு வந்தால் அவருக்கு பிகா எனும் உணவு சீர்குலைவு பிரச்சனை இருக்கலாம் என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பிரச்சனை உங்களுக்கு ஏற்பட்டால் உணவு உட்கொள்ளும் உணர்வே வராது எனவும், பச்சை காய்கறிகள் மற்றும் சத்தான உணவுகளை பார்த்தால் வெறுப்பு தோன்றும் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பிகா எனும்  உணவு சீர்குலைவு பிரச்சனை அரிசி உண்பவர்களுக்கு மட்டும் அல்ல திருட்டுதனமாக ஸ்லேட் பென்சில் உண்பவர்கள், சாக்பீஸ், கிரையான்ஸ், மாவு,சர்க்கரை, உப்பு போன்றவைகளை உட்கொள்பவர்களுக்கும் ஏற்படும்.

rice

இதன் காரணமாக உடலில் இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டு உடல் சோர்வு, வாந்தி, தலை சுத்தல், மூச்சு வாங்குதல் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட நூறு சதவீதம் வாய்ப்பு உள்ளது. மேலும் அரிசி பேசில்லஸ் சீரஸ் என்னும் பாக்டீரியாவால் சூழப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா உடலினுள் செல்லும் போது, உடலினுள் உள்ள நல்ல பாக்டீரியாக்களை முழுமையாக அழித்துவிடும் எனவும் இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் படிக்க | EV Awareness: பசுமை ஆற்றலை முன்னிலைப்படுத்திய மின்சார வாகன பேரணி

அதேபோல, அரிசியில் லெசித்தின் என்னும் பூச்சிக் கொல்லி இயற்கையாகவே உள்ளது. இந்த பூச்சிக்கொல்லி தானியங்களை பாதுகாக்கும் வகையில் இருக்கிறது. ஆனால் அரிசியை நாம் வேக வைக்காமல் உட்கொள்ளும்போது இந்த பூச்சிக்கொல்லியும் உடலினுள் செல்லும். அவை குடலில் உள்ள செரிமான செல்களை முற்றிலுமாக அழித்துவிடும் எனவும், இது அதிகமாக உடலினுள் சேரும் போது, குடல் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் வர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News