அவசரத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் கடன் தேவையா? இதுதான் வழி.. இங்கே விண்ணப்பிக்கவும்

"சுய சார்பு நிதி கடன்" திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் பரவியிருக்கும் 3.8 லட்சம் பொது சேவை மையங்கள் மூலம் ரூ .10,000 வரை கடன் பெற முடியும். 

Last Updated : Jul 23, 2020, 08:12 PM IST
அவசரத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் கடன் தேவையா? இதுதான் வழி.. இங்கே விண்ணப்பிக்கவும் title=

Atma Nirbhar Nidhi Loan Scheme: சிறு தொழில், தெரு விற்பனையாளர்கள், டிராக் கடைக்காரர்களுக்கு இப்போது கடன் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இவர்கள் இப்போது "சுய சார்பு நிதி கடன்" திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் பரவியிருக்கும் 3.8 லட்சம் பொது சேவை மையங்கள் (CSC) மூலம் ரூ .10,000 வரை கடன் பெற முடியும். மத்திய அரசாங்கத்தின் டிஜிட்டல் அமைப்பு, இ-சேவைகள் பிரிவான சி.எஸ்.சி மற்றும் இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் இணைந்து, வணிகர்களுக்கு கடன்களை வழங்கும்.

பிரதான் மந்திரி (Pradhan Mantri Yojana) தெருவோர விற்பனையாளர்கள் சுய நம்பக நிதி திட்டத்தில்  வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகத்தினால் நிதியளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தெருவில் கடை வைத்திருப்பவர்கள், சாலை ஓரத்தில் மற்றும் கூடாரம் போட்டு கடை மற்றும் தொழில் நடத்தும் போன்ற சிறு தொழிலதிபர்களுக்கு ரூ .10,000 வரை கடன் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், கடன் பெருபவர்கள் Repay மேற்கோளால்வும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதுவும் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொலவதன் மூலம் வெகுமதி பெறுகிறார்கள். இத்திட்டம் தெரு விற்பனையாளர்களுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும்.

ALSO READ | லோன், EMI, வரி, EPF பணம்.... யாருக்கு நன்மை என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

இந்த திட்டத்தின் கீழ் சிறு வணிகர்களை பதிவு செய்ய சி.எஸ்.சி உதவும். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சஞ்சய் குமார் கூறுகையில், இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு ரூ .10,000 வரை கடன் (LOAN) கிடைக்கும். இந்த மூலதனம் 1 வருட காலத்திற்கு இருக்கும். இதை மாதத் தவணைகளில் செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் நிறுவனம் பணத்துக்கு எந்த உத்தரவாதமும் தராது. அனைத்து வணிகர்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டியிருக்கும். 

இந்த திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக Sidbi நியமிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு லட்சம் விண்ணப்பங்கள் அதன் கீழ் வந்துள்ளன, அதே நேரத்தில் 50 ஆயிரம் வர்த்தகர்களுக்கு கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | உங்கள் பணப் பிரச்சினையை தீர்க்கும் LIC.. இனி பாலிசியுடன் கடன் வழங்கப்படும்

Trending News