அறுவை சிகிச்சையின் போது வயிற்ருக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்த மருத்துவர்....

அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்ருக்குள் கத்தரிக்கோலை வைத்து தைதத்தால் பரபரப்பு....

Updated: Feb 10, 2019, 08:51 AM IST
அறுவை சிகிச்சையின் போது வயிற்ருக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்த மருத்துவர்....
Representational Image

அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்ருக்குள் கத்தரிக்கோலை வைத்து தைதத்தால் பரபரப்பு....

ஐதராபாத்தில் நோயாளியின் வயிற்றுக்குள் அறுவை சிகிச்சை உபகரணத்தை வைத்துவிட்டு மறந்துபோன மருத்துவர்களின் அலட்சியம் எக்ஸ் ரே மூலம் அம்பலமாகியுள்ளது.

ஐதராபாத்தில் புகழ்பெற்ற நிசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 மாதங்களுக்கு முன் 33 வயது பெண் ஒருவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். பின் வீடு திரும்பிய அவருக்கு கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியான வயிற்று வலி இருந்தது. இதைப் பரிசோதிப்பதற்காக மருத்துவமனைக்கு நேற்று அழைத்து வரப்பட்ட போது, அவருக்கு எக்ஸ் ரே பரிசோதனை மேற்கொண்டது.

அதில், மருத்துவ அறுவை சிகிச்சை உபகரணமான ஃபோர்செப்ஸ் என்ற இடுக்கி போன்ற ஒன்று இருந்ததை அறிந்த அதே மருத்துவமனை மருத்துவர்கள் உடனடியாக இன்று காலை மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதை அப்புறப்படுத்தினர். நோயாளியின் வயிற்றுக்குள் அதை வைத்துவிட்டு மறந்து தையல் போட்ட அலட்சிய மருத்துவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.