வாகன ஓட்டுநர்களுக்கு நல்ல செய்தி: இந்த முக்கிய காலக்கெடு செப்டெம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது

சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி, பிப்ரவரி 1, 2020 அன்று காலாவதியாகி,  லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக புதுப்பிக்க முடியாத ஆவணங்கள் இப்போது 2021 செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 7, 2021, 04:16 PM IST
வாகன ஓட்டுநர்களுக்கு நல்ல செய்தி: இந்த முக்கிய காலக்கெடு செப்டெம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது title=

Driving License Latest Update: உங்கள் ஓட்டுநர் உரிமம் பதிவுச் சான்றிதழ் (RC) அல்லது வாகனத்தின் ஃபிட்னஸ் சர்டிபிகேட் உள்ளிட்ட பிற மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் முடிந்துபிட்டால் அல்லது முடியும் தருவாயில் இருந்தால், நீங்கள் பீதி அடையத் தேவையில்லை. இந்த மாத இறுதி வரை நீங்கள் அதை புதுப்பித்துக்கொள்ளலாம்.

கொரோனா தொற்றின் (Coronavirus) இரண்டாவது அலையை மனதில் வைத்து, இந்த ஆவணங்கள் அனைத்தும் செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும் என்று அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, இந்த ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் ஜூன் 30 ஆம் தேதி வரை இருந்தது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான மக்கள் பெரிய நிவாரணம் பெறுவார்கள்.

ஓட்டுநர் உரிமம், RC ஆகியவை செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும்

சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி, பிப்ரவரி 1, 2020 அன்று காலாவதியாகி,  லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக புதுப்பிக்க முடியாத ஆவணங்கள் இப்போது 2021 செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும்.

ALSO READ: டிரைவிங் லைசென்ஸ் உரிமம் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை!

இது தொடர்பான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் அமைச்சகம் வழங்கியுள்ளது. இதன் காரணமாக, போக்குவரத்து தொடர்பான சேவைகளில் குடிமக்கள் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ளக்கூடாது என்று அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடினமான நேரத்தில் பணிபுரியும் போக்குவரத்து மற்றும் பிற அமைப்புகள் எந்தவிதமான துன்புறுத்தல்களையும் சிக்கல்களையும் எதிர்கொள்ளாத வகையில் அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்த விதிகளை உடனடியாக அமல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

செல்லுபடி காலம் பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது

கொரோனா தொற்று நோயைக் கருத்தில் கொண்டு, ஓட்டுநர் உரிமம் (Driving License), ஆர்.சி மற்றும் ஃபிட்னஸ் சர்டிஃபிகேட் போன்ற ஆவணங்களின் செல்லுபடியை அரசாங்கம் பல முறை நீட்டித்துள்ளது. முன்னதாக, இந்த ஆவணங்கள் அனைத்தும் ஜூன் 30, 2021 வரை செல்லுபடியாகும் என கூறப்பட்டது.

முன்னதாக, 30 மார்ச் -2020, 9 ஜூன் -2020, 24 ஆகஸ்ட் -2020, 27 டிசம்பர் -2020, 26 மார்ச் -2021 ஆகிய தேதிகளுக்கும் சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

லாக்டவுன் (Lockdown) கட்டுப்பாடுகள் காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து மற்றும் உற்பத்தி சுமூகமாக நடக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு,  இந்த ஆவணங்களின் செல்லுபடியாகும் தன்மை நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிப்பதில் குடிமக்கள் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை அரசாங்கம் அறிந்ததும், அவற்றின் செல்லுபடியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

புதிய உரிமங்களின் உருவாக்கம் தொடங்கியது

தற்போது, ​​உபி உட்பட பல மாநிலங்களில் ஓட்டுநர் உரிமம் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆனால் இப்போது புதிய உரிமங்கள் மட்டுமே செய்யப்படுகின்றன. உரிமத்தை புதுப்பித்தல், லர்னிங் ல்லைசென்ஸ் ஆகியவற்றுக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் ஜூன் 30 ஆம் தேதியுடன் காலாவதியானதால், வாகனங்களின் ஆவணங்களை எப்படி பெறுவது என்பது குறித்து மக்களுக்கு கவலை இருந்தது. அரசாங்கத்தின் இந்த முடிவு கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு நிவாரணமாக அமைந்துள்ளது.

ALSO READ: Aadhaar - DL link: வீட்டில் இருந்த படியே, ஆதார் - ஓட்டுநர் உரிமத்தை நொடியில் இணைக்கலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News