வங்கியில் தங்கம், வருமானம் தினம் தினம்: SBI-ன் Revamped Gold Deposit Scheme: விவரம் உள்ளே!!

பெரும்பாலான மக்கள் தங்க நகைகளை விரும்புகிறார்கள். அதே சமயம், இந்த தங்க நகைகளை வீட்டில் வைப்பதற்கு பதிலாக வங்கி லாக்கரில் வைத்திருக்கும் சிலரும் இருக்கிறார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 19, 2020, 01:47 PM IST
  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) இப்போது மக்கள் தங்கள் தங்கத்தைக் கொண்டு பணம் ஈட்ட ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
  • SBI திட்டத்தின் கீழ் குறைந்தது 30 கிராம் தங்கத்தை டெபாசிட் செய்வது அவசியமாகும்.
  • தங்கத்தை டெபாசிட் செய்ய அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.
வங்கியில் தங்கம், வருமானம் தினம் தினம்: SBI-ன் Revamped Gold Deposit Scheme: விவரம் உள்ளே!! title=

புதுடில்லி: நம் நாட்டில், நகைகள் மனித சமூகத்தின் இன்றியமையாத ஒரு அங்கமாக, ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன. பெரும்பாலான மக்கள் தங்க நகைகளை (Gold Jewellery) விரும்புகிறார்கள். அதே சமயம், இந்த தங்க நகைகளை வீட்டில் வைப்பதற்கு பதிலாக வங்கி லாக்கரில் வைத்திருக்கும் சிலரும் இருக்கிறார்கள். அங்கு அவர்கள் நகைகளின் பாதுகாப்பிற்கு ஒரு குறிப்பிட்ட விலையை கொடுக்க வேண்டியுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) இப்போது மக்கள் தங்கள் தங்கத்தைக் கொண்டு பணம் ஈட்ட ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் மக்கள் தங்கத்தை லாக்கரில் வைப்பதற்கு பதிலாக, அவற்றை வைத்து பணம் ஈட்ட முடியும். SBI உங்கள் தங்கத்தைக் கொண்டு பணம் சம்பாதிக்க புதுப்பிக்கப்பட்ட தங்க வைப்புத் திட்டத்தை (Revamped Gold Deposit Scheme) நடத்தி வருகிறது.

ALSO READ: SBI வழங்கும் விழாக்கால சிறப்பு சலுகைகள்: விவரம் இதோ!!

தற்போது, ​​இந்த திட்டத்தை SBI மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளது. இதில் முதல் வகையான குறுகிய கால வங்கி வைப்புத்தொகை திட்டத்தின் (STBD) படி தங்கம் 1-3 ஆண்டுகள் வரையிலும், இரண்டாவது வகையான நடுத்தர கால அரசு வைப்புத்தொகையின் (MTGD) படி 5-7 ஆண்டுகள் வரையிலும், மூன்றாவது வகையான நீண்ட கால அரசு வைப்புக்கு (LTGD) 12-15 ஆண்டுகள் வரையிலும் தங்கத்தை ஃபிக்ஸ்டாக அதாவது வைப்பாக ஆக்கலாம்.

SBI திட்டத்தின் கீழ் குறைந்தது 30 கிராம் தங்கத்தை டெபாசிட் செய்வது அவசியமாகும். அதே நேரத்தில், தங்கத்தை டெபாசிட் செய்ய அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர் 995 தூய்மையுள்ள தங்கத்தை டெபாசிட் செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் கீழ், தங்கத்தை வங்கியில் டெபாசிட் (Deposit) செய்வதன் மூலம் வட்டியும் பெறலாம்.

ALSO READ: SBI Card வைத்திருப்பவர்களுக்கு Good News: உங்கள் card-ன் பலம் கூடியது!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News