யுபிஐ செயலிகளான போன்பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் செயலிகளின் பயன்பாடு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. காய்கறி கடை முதல் கழிப்பறை வரை பணம் செலுத்துவதற்கு கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்ற செயலிகளே பயன்படுத்தப்படுகின்றன. மேலும், கரண்ட் பில், மின்சார பில், மொபைல் பில், டிவி ரீச்சார்ஜ் என சகலத்தையும் இதன் வழியாக நொடியில் செலுத்திவிட முடியும். அந்தளவுக்கு பணப் பரிவர்த்தனைகளை எளிமையாக கொண்டிருக்கும் பேடிஎம், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு போஸ்ட்பெய்ட் வசதி மூலம் கடன்களையும் வழங்குகிறது.
உங்கள் மொபைலில் பேடிஎம் செயலி இருந்தால்போதும், நீங்கள் உடனடியாக பேடிஎம் போஸ்ட்பெய்ட் அம்சத்துக்கு விண்ணப்பித்து, அதன்மூலம் கடனை பெற முடியும். உங்களிடன் பணம் இல்லையென்றால், பேடிஎம் போஸ்ட்பெய்டில் இருந்து பணத்தை செலுத்தி, கிரெடிட் கார்டுகளுக்கு பணத்தை செலுத்துவது போலவே, இந்த பில்லையும் செலுத்தினால்போதும். கடன் வாங்குவதற்கு முன்பு நீங்கள் முதலில் போஸ்ட்பெய்டில் உங்களை வாடிக்கையாளராக இணைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | Ration Card: ரேஷன் கடைகளை கண்காணிக்க புதிய செயலி தொடக்கம்
PAYTM போஸ்ட்பெய்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
* உங்கள் மொபைலில் Paytm செயலியை திறக்கவும்.
* பிறகு முகப்புப் பக்கத்தில் உள்ள போஸ்ட்பெய்டு ஐகானைத் தட்டவும்.
* பான் கார்டு எண், பிறந்த தேதி மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற தேவையான விவரங்களை நிரப்பவும்.
* உங்கள் கடன் அறிக்கையைப் பெறுவதற்கு உங்கள் ஒப்புதலை வழங்க, தேர்வுப்பெட்டியைத் தட்டவும்.
* இப்போது உங்களுக்கான சிறந்த சலுகைக்காக சில வினாடிகள் காத்திருக்கவும்.
* ஒரு சலுகை உருவாக்கப்பட்டு, கிரெடிட்/லோன் வரம்புடன் திரையில் தோன்றும்.
* KYC சரிபார்ப்பை முடிக்க செல்ஃபி எடுக்கவும்.
* இப்போது உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும். பதிவு செய்யப்பட்ட எண்ணில் நீங்கள் OTP பெறுவீர்கள்.
* இறுதியாக, Paytm போஸ்ட்பெய்டைச் செயல்படுத்த உங்கள் விவரங்களை உறுதிப்படுத்தவும்.
இந்த நடைமுறைப்படி நீங்கள் பேடிஎம் போஸ்ட் பெய்டை ஆக்டிவேட் செய்துவிட்டால், உடனடியாக உங்களுக்கு தேவையான கடனை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி அரியர் தொகை எப்போது கிடைக்கும்? முக்கிய அப்டேட்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ