குளிர்காலத்தில் உலர்ந்த பழங்களை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன என கூறப்படுகிறது. அது எந்த அளவிற்கு உண்மை தெரியுமா?
குளிர்காலத்தில் உலர்ந்த பழங்களை சாப்பிடுவதால், குறிப்பாக பேரிட்சை பழங்களை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது. பேரிட்சை உங்கள் உடலுக்கு நிறைய வைட்டமின்கள் A மற்றும் B தருகின்றன. புதிய செல்களை உருவாக்க உதவுகிறது.
உடல் நலத்திற்கு பல நன்மைகள் அளிக்கும் இந்த பேரிட்சை பழங்களை எப்படி சாப்பிடுவது?, எந்த நேரத்தில் சாப்பிடுவது என்பதும் முக்கியமான காரணி ஆகும். இந்நிலையில் பேரிட்சை பழங்களை எவ்வாறு சாப்பிடுவது என்பது குறித்த தகவலை இந்த பதிவில் பார்ப்போம்.
- நீரிழிவு நோயாளிகளுக்கு இதை உட்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. பேரிட்சை பழங்களை கொண்டு சட்னி தயாரித்து அதை உட்கொள்ளுதல் பல நம்மை அளிக்கின்றது. அல்லது புட்டு தயாரித்து அதனை சாப்பிடுவதாலும் உடலுக்கு தேவையான விட்டமின்களை நாம் பெறலாம். காரணம் பேரிட்சைகள் உடலின் சக்கரை அளவை அதிகரிப்பதில்லை, ஏனெனில் அதில் இயற்கை சர்க்கரை காணப்படுகிறது.
- இரத்த அழுத்த பிரச்சனையால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உயர் இரத்த அழுத்தத்தின் சிக்கலைக் குறைக்க, பேரிட்சை பழங்களை இரவில் சூடான நீரில் ஊறவைத்து, காலையில் விதைகளை வெளியே எடுத்து உட்கொள்ளுங்கள். காலையிலும் மாலையிலும் இதை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் காண்பிக்கும்.
- ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பாலுடன் பேரிட்சை பழங்களை உட்கொள்வது நள்ளது. சூடான பேரிட்சை உடலுக்கு வலிமை அளிக்கிறது, நுரையீரலின் வெப்பம் வெளியேறி சுவாச பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.