ஸ்டோக்ஹோம்: 2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. வறுமை ஒழிப்பு தொடர்பான ஆய்வுக்காக அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகிய 3 பேருக்கு கொடுக்கப்பட்டது. அபிஜித் பானர்ஜி அமெரிக்கவாழ் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்று, ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குகின்றனர்.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெரும் அபிஜித் பானர்ஜி கொல்கத்தாவில் பிறந்தவர். இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அமெரிக்கா குடியுரிமையும் பெற்றுள்ளார்.
2019 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களான வில்லியம் ஜி கைலின் ஜூனியர், சர் பீட்டர் ஜே ராட்க்ளிஃப் மற்றும் கிரெக் எல் செமென்சா ஆகியோருக்கு கடந்த 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.