EPFO: UAN-ஐ எப்படி தெரிந்துகொள்வது? ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு செயல்முறை இதோ

UAN என்பது PF கணக்கு இருப்பு மற்றும் EPF தொடர்பான பிற விவரங்களைச் சரிபார்க்க ஊழியர் பயன்படுத்தும் 12 இலக்க எண்ணாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 8, 2022, 03:17 PM IST
  • UAN ஐ மறந்துவிட்டாலோ அல்லது அதைப் பற்றி உங்களுக்கு தெரியாமல் இருந்தாலோ, அதை தெரிந்துகொள்வது மிக எளிது.
  • ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலுக்குச் சென்று இதை செய்து முடிக்கலாம்.
  • UAN பல விவரங்களைச் சரிபார்க்க ஊழியர் பயன்படுத்தும் 12 இலக்க எண்ணாகும்.
EPFO: UAN-ஐ எப்படி தெரிந்துகொள்வது? ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு செயல்முறை இதோ title=

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உறுப்பினராக உள்ள ஒவ்வொரு பணியாளருக்கும் நிறுவனத்தால் உலகளாவிய கணக்கு எண் (UAN) ஒதுக்கப்பட்டுள்ளது. UAN என்பது PF கணக்கு இருப்பு மற்றும் EPF தொடர்பான பிற விவரங்களைச் சரிபார்க்க ஊழியர் பயன்படுத்தும் 12 இலக்க எண்ணாகும்.

மேலும், UAN ஆனது KYC விவரங்களுடன் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதால், முதலாளிகள் மற்றும் பணியாளர் பணிபுரியும் நிறுவனங்களின் தலையீடு இல்லாமல் நேரடியாக பல்வேறு ஆன்லைன் சேவைகளைப் பெற உறுப்பினருக்கு உதவுகிறது.

இருப்பினும், நீங்கள் UAN ஐ மறந்துவிட்டாலோ அல்லது அதைப் பற்றி உங்களுக்கு தெரியாமல் இருந்தாலோ, அதைத் தெரிந்துகொள்ள EPFO-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் (https://unifiedportal-mem.epfindia.gov.in) பார்வையிடலாம்.

யுஏஎன்: தெரிந்துகொள்ளும் செயல்முறை:

1. ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலுக்குச் செல்லவும்.

2. உறுப்பினர் ஐடி, ஆதார் அல்லது பான் ஆகியவற்றில் ஒன்றைத் தெர்ந்தெடுக்கவும்.

3. EPFO ​​பதிவுகளின்படி பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்ற விவரங்களை உள்ளிடவும்.

4. "Get Authorization Pin" விருப்பத்தை கிளிக் செய்யவும்.

5. EPFO ​​இல் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு பின் அனுப்பப்படும்.

6. பின்னை உள்ளிட்ட பின்னர், உங்கள் UAN உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.

ALSO READ | EPFO முக்கிய செய்தி: இன்றே இந்த பணியை செய்து முடிக்கவும், ட்வீட் மூலம் தெரிவித்தது EPFO

உங்களது UAN உங்களுக்குத் தெரிந்திருந்து, ஆனால், அது செயல்படுத்தப்படவில்லை என்றால், அதை நீங்கள் இந்த வழியில் செயல்படுத்தலாம் (ஆக்டிவேட் செய்யலாம்): 

1. EPF உறுப்பினர் (EPF Members) போர்ட்டலுக்குச் சென்று UMANG APP இல் EPFO ​​இன் ஊழியர் மைய சேவைகளின் கீழ் "Activate UAN" அல்லது UAN ஆக்டிவேஷன் என்பதைக் கிளிக் செய்யவும்.

2. பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் - UAN, உறுப்பினர் ஐடி, ஆதார் அல்லது பான்.

3. பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்ற கூடுதல் விவரங்களைப் பூர்த்தி செய்து, "Get Authorization PIN" என்பதைக் கிளிக் செய்யவும்.

4. EPFO ​​இல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அங்கீகார PIN அனுப்பப்படும்.

5. இந்த பின்னை உள்ளிட்டு, "Validate OTP and Activate UAN" என்பதைக் கிளிக் செய்யவும்.

6. UAN செயல்படுத்தப்பட்டு (Activated), உறுப்பினரின் மொபைலுக்கு கடவுச்சொல் அனுப்பப்படும். இப்போது உறுப்பினர் தனது UAN மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலில் லாக் இன் செய்யலாம். 

ALSO READ | EPFO Big News: ஊழியர்களின் குடும்பங்களுக்கு கிடைக்கும் இந்த நிதி இரட்டிப்பானது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News