இன்றைய காலகட்டத்தில், எந்தவொரு நிதி பரிவர்த்தனைக்கும் PAN Card-ஐ வைத்திருப்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. பான் கார்டின் பத்து இலக்கங்கள் மூலம், வங்கிக் கணக்கைத் திறப்பது, சொத்து வாங்குவது அல்லது விற்பது, கார் வாங்குவது அல்லது விற்பது, ஐ.டி.ஆர் தாக்கல் செய்வது, ரூ .2 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள நகைகளை வாங்குவது போன்ற பல விஷயங்களை நீங்கள் எளிதாக செய்யலாம்.
இருப்பினும், இப்போதெல்லாம் போலி பான் கார்டுகள் (Fake PAN Card) தொடர்பான பல வழக்குகள் வந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஏதேனும் பரிவர்த்தனை செய்வதற்கு முன், உங்கள் பான் கார்டும் போலியானதா என்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது.
வருமான வரித் துறை PAN-ஐ வெளியிடுகிறது
இன்றைய காலகட்டத்தில், நிதி மற்றும் வங்கி நடவடிக்கைகளுக்கு PAN பயன்பாடு கட்டாயமாகும். வருமான வரித் துறை (Income Tax Department) 10 இலக்க அடையாள எண்ணை வெளியிடுகிறது. PAN கார்டு என்பது நமது அடையாளத்தின் முக்கியமான ஆவணமாகும்.
ALSO READ: IRCTC-ன் இந்த டூரில் தீபாவளியன்று உண்மையான கங்கை குளியல்: Book today!!
உங்கள் PAN- ஐ நீங்கள் இவ்வாறு அடையாளம் காணலாம்
• முதலில், நீங்கள் வருமான வரித் துறையின் e-filing போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.
• இங்கே, நீங்கள் நேரடியாக ‘Verify your PAN details’ என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
• இதற்குப் பிறகு, பயனர்கள் PAN அட்டை விவரங்களை நிரப்ப வேண்டும்.
• இதில், உங்களது PAN எண், பான் அட்டை வைத்திருப்பவரின் முழு பெயர், பிறந்த தேதி போன்றவை பற்றிய தகவல்கள் வழங்கப்படும்.
• சரியான தகவலை நிரப்பிய பிறகு, நிரப்பப்பட்ட தகவல்கள் உங்கள் PAN கார்டுடன் பொருந்துகிறதா இல்லையா என்ற செய்தி போர்ட்டலில் வரும்.
• இந்த வழியில் நீங்கள் பான் கார்டின் உண்மையை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
போலி PAN கார்ட் வழக்குகள் அதிகரித்து வருகின்றன
நாட்டில் லாக்டௌனுக்கு (Lockdown) பின்னர், பலர் போலி PAN கார்டுகளைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகிறார்கள். இந்த சூழ்நிலையில், உங்கள் PAN அட்டையின் உண்மையை அறிந்து கொள்வது மிக முக்கியம். வருமான வரித்துறை வழங்கிய PAN கார்டை சரிபார்ப்பதும் அவசியமாகும்.
PAN கார்டை இந்த வழியில் பெறலாம்
நீங்கள் இன்னும் PAN கார்டை பெறவில்லை என்றால், அதை நிமிடங்களில் பெறும் வசதியை அரசாங்கம் தொடங்கியுள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள். இதற்கு நீங்கள் வருமான வரி வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். இந்த சேவை இன்னும் PAN கார்ட் பெறாதவர்களுக்கானது.
E PAN ஐப் பெற, நீங்கள் உங்கள் ஆதார் அட்டை எண்ணை (Aadhaar Card Number) வழங்க வேண்டும். அதில் இருந்து OTP உருவாக்கப்படும். சில நிமிடங்களில் E PAN உங்களுக்கு வழங்கப்படும்.
ALSO READ: இளைஞர்களுக்காக 'Mine' சலுகையை அறிமுகப்படுத்திய ICICI வங்கி..!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR