அக்டோபர் 24 முதல் Flipkart-ன் சலுகை விற்பனை ஆரம்பம்!!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Flipkart-ன் Festive Dhamaka Days sale வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.

Last Updated : Oct 22, 2018, 10:45 AM IST
அக்டோபர் 24 முதல் Flipkart-ன் சலுகை விற்பனை ஆரம்பம்!! title=

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Flipkart-ன் Festive Dhamaka Days sale வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.

பிரபல ஆன்லைன் விற்பனை தளமான Flipkart தனது வாடிக்கையாளரை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் அக்டோபர் 24 துவங்கி நான்கு நாட்களுக்கு Flipkart Festive Dhamaka Days sale அறிவித்துள்ளது. 4 நாட்கள் நடைபெறும் இந்த சலுகை விற்பனை வரும் அக்டோபர் 27-ம் தேதி முடிவடையும்.

4 நாட்கள் நடைபெறும் இந்த பிளப்கார்ட் சேலில் முன்னணி நிறுவனங்களில் அனைத்து பொருட்களுக்கும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. 

அக்டோபர் 23-ம் தேதி இரவு 9 மணி அளவில் பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு இந்த தள்ளுபடியை முன்னதாகவே பிளிப்கார்ட் வழங்குகிறது. 

பிளிப்கார்ட் நிறுவனம் இந்த சேலில் பேமண்ட் சார்ந்த சலுகைகளை வழங்க ஆக்சிஸ் பேங்க் உடன் பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கேஸ்பேக் சலுகையா அல்லது உடனடி சலுகையா என்பது குறித்து பிளிப்கார்ட் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும் பேமண்ட் ஆஃபர்கள் ஆக்ஸிஸ் பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு விற்பனையில், பிரபலமான நிறுவனங்களின் தயாரிப்புகள் மிக்பெரிய அளவிலான தள்ளுபடி விலையில் கிடைக்க வழிவகுத்துள்ளது Flipkart. ஸ்மார்ட்போன்கள், மொபைல்கள், டிவிக்கள் மற்றும் உபகரணங்கள், மின்னணுவியல், தளபாடங்கள் மற்றும் பல பொருட்கள் இந்த சிறப்பு விற்பனையில் குறைவான விலையில் கிடைக்கும்.

Trending News