அந்தமான் கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து கஜா புயலாக மாறியுள்ளது. சென்னைக்கு கிழக்கே 750 கி.மீ. தூரத்திலும், நாகைக்கு வடகிழக்கே 840கி.மீ. தொலைவிலும் இந்த புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கஜா புயல் கடலூர் மற்றும் வேதாரண்யம் பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் முகப்புத்தக்க பதிவு மூலம் தெரிவித்ததிருந்தார்.
இந்நிலையில், இன்று மாலை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது. நாளை (வியாழக்கிழமை) மதியம் பாம்பன் கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்க உள்ளது. குறிப்பாக கடலூர மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் 700 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை யாரும் மீன்பிடிக்க செல்ல கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
The Cyclonic storm ‘GAJA’ over Westcentral and adjoining Eastcentral & South Bay of Bengal and lay centred at 2330 hrs IST of 13th November, 2018 over and about 580 km east of Chennai (Tamil Nadu) and 680 km northeast of Nagapattinam (Tamil Nadu). pic.twitter.com/PiocyJcrgR
— IMD-Weather (@IMDWeather) November 13, 2018
கஜா புயலை சமாளிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கபட்டு உள்ளது. இந்தியக் கடலோரகாவல் படை கப்பல் மற்றும் ஐ.என்.எஸ் பருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.
Bulletin No 27 #CycloneGaja lying 580 kms east of Chennai and 680 kms NE of #nagapattinam and likely to have landfall between #Pamban and #Cuddalore on afternoon of 15th November Please Retweet and share! Follow @tnsdma for more updates pic.twitter.com/EiHRx9y3Xz
— TN SDMA (@tnsdma) November 14, 2018