புது தில்லி: நேரில் பேசும் போதும், போனில் பேசினாலும், மெசேஜ் மூலமாகவோ சேட் மூலமாகவோ பேசினாலும் சரி, பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஒரு வார்த்தை 'ஓகே'. இரண்டு எழுத்துகள் கொண்ட இந்த வார்த்தையைப் பயன்படுத்தாத நபர்களே இல்லை எனலாம். ஏதாவது ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால், இந்த இரண்டு எழுத்துகளும் ஒரு முழுமையான வாக்கியம் போல் கருதப்பட்டு, பொதுவான பேச்சு வார்த்தையாக மாறிவிட்டன. இதற்கு சரி என பொருள் கொள்ளலாம். ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஓகே என்பதன் முழு வடிவம் என்னவென்று பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.
OK என்பது All correct என பொருள்படும்
OK என்பது ஆங்கிலத்தில் மிகவும் பொதுவான வார்த்தைகளில் ஒன்றாகும். ஏற்றுக்கொள்வது, உடன்பாடு, ஒப்புதல் போன்ற பல விஷயங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. OK என்றால் 'Olla Kalla'. இது ஒரு கிரேக்க வார்த்தை. OK என்ற வார்த்தை 182 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தது. இது அமெரிக்க பத்திரிகையாளர் சார்லஸ் கார்டன் கிரீனின் (Charles Gordon Greene) அலுவலகத்தில் தொடங்கியது. 1839 ஆம் ஆண்டில், எழுத்தாளர்கள் வேண்டுமென்றே வார்த்தைகளை மாற்றி சுருக்கங்களைப் பயன்படுத்தினர். இன்று நாம் LOLZ, OMG அல்லது NBD போன்றவற்றை பயன்படுத்துவது போல் ஓகே என்பது பயன்படுத்தப்பட்டது. ஓகே முதலில் “Oll Korrect” என்பதன் சுருக்கமாக பயன்படுத்தப்பட்டது. இது இலக்கணம் பற்றிய ஒரு நையாண்டி கட்டுரை 1839 இல் பாஸ்டன் மார்னிங் போஸ்டில் வெளியிடப்பட்டது. இந்தப் போக்கு பின்னாளில் OW போன்ற சொற்களையும் பயன்படுத்த வழிவகுத்தது. இது "oll wright" அல்லது all right என்றும் பொருள்படும்.
ALSO READ | Check in Baggage: விமானத்தில் உங்கள் லக்கேஜ் எப்படி கையாளப்படுகிறது என தெரியுமா!
இதன் பிறகு ஓகே என்பது தேர்தல் முழக்கமாக பயன்படுத்தப்பட்டது. 1840 ஆம் ஆண்டில், அமெரிக்க ஜனாதிபதி மார்ட்டின் வான் ப்யூரனின் மறுதேர்தல் பிரச்சாரத்தில் ஓகே என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு, அது உலகம் முழுவதும் பிரபலமானது. நியூயார்க்கின் கிண்டர்ஹூக்கில் பிறந்த வான் ப்யூரனுக்கு (Van Buren) “ Old Kinderhook" என்ற புனைப்பெயர் இருந்தது. அதனால் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சாரங்களின் போது பேரணிகளில் "OK" என்று பயன்படுத்தினர். நாடு முழுவதும் "OK Clubs" உருவாக்கினர்.
OK தொடர்பான இன்னும் சில சுவாரஸ்ய தகவல்கள்
OK என்பது பூர்வீக அமெரிக்க இந்திய பழங்குடியான சோக்டாவின்(Choctaw) okeh என்ற வார்த்தையிலிருந்து வந்தது என்று முன்பு கூறப்பட்டது. இது ஆப்பிரிக்காவின் வோலோஃப் மொழியிலிருந்து பெறப்பட்டது என்றும் கூறப்பட்டது. சரி பற்றி பல்வேறு வாதங்கள் உள்ளன.
ALSO READ | 600 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் ..!!!
ஸ்மித்சோனியன் (Smithsonian) இதழில் வெளியான ஒரு கட்டுரையில், OK என்ற வார்த்தை 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றியது என கூறப்பட்டுள்ளது. ‘All Correct’ என்பதற்கு OK என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும், இந்த வார்த்தை “Oll Korrect” என மாற்றப்பட்டுள்ளதாகவும் ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த வார்த்தை ஏசிக்கு பதிலாக ஓகே ஆனது. இதன்படி, ஓகே என்பது 'ஆல் கரெக்ட்' என்று பொருள்படும், இது "ஆல் கரெக்ட்" என மாற்றப்பட்டுள்ளது. சரியான சொல் Okay என்றும், மக்கள் OK என தவறான வழியில் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
OK எங்கே பயன்படுத்தப்படுகிறது?
வாக்கியங்களில் Ok பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிவோம். இது பெயரடை அல்லது வினையுரிச்சொல் இரண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. எதற்கும் சம்மதத்தைப் பதிவு செய்வதில் இது அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது வாக்கியத்திற்கு ஏற்ப வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.
ALSO READ | Name Astrology: இந்த எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட பெண்ணிற்கு தொழில் வெற்றி உறுதி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR