கோவா to டார்ஜிலிங்; இந்த 5 இடங்களுக்கு நீங்க தாராளமாக போகலாம்..!

டூர் செல்லும் பிளான் உங்களிடம் இருந்தால், இந்த 5 இடங்களை அந்த லிஸ்டில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் எதிர்பார்க்காத இயற்கை ஆச்சரியங்களும், வியப்பும் இந்த இடங்களில் உங்களுக்கு கிடைக்கும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 25, 2021, 04:29 PM IST
கோவா to டார்ஜிலிங்; இந்த 5 இடங்களுக்கு நீங்க தாராளமாக போகலாம்..! title=

டெல்டா வேரியண்டில் இருந்து விடுபட்ட உடன், ஒமிக்ரான் அச்சுறுத்துகிறது. கொஞ்சம் கூட Gap இல்லாம, அடிக்கிறீங்களேடா என்ற கணக்கா, வைரஸின் ஆட்டம் இருக்கிறது. எவ்வளவு நாள் தான் வலியும், வேதனையோடும் வாழ்வது. அழகான வாழ்க்கையில் ஒரு நொடி போனால் கூட, திரும்ப வராது. அதனால், உங்களை ரிலாக்ஸ் செய்துகொள்ள நம் நாட்டுக்குள்ளேயே இருக்கும் அழகான இடங்களுக்கு சென்று வாருங்கள். அந்த பயணம், உங்களை ஒரு பரவசமான நிலைக்கு இட்டுச்செல்லும். அப்படியான அனுபவத்தைக் கொடுக்கக்கூடிய 5 இடங்களை இங்கே பார்க்கலாம். 

1. போபால் (Bhopal)

மத்தியப்பிரதேசத்தின் தலைநகர் ’போபால்’. வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரத்துடன் கூடிய ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம். ’ஏரிகளின் நகரம்’ என்ற பட்டப்பெயர் இதற்கு உண்டு. 11ஆம் நூற்றாண்டில் இந்த நகரை ஆண்ட மன்னர் போஸ், போபாலைச் சுற்றி செயற்கை ஏரிகளை உருவாக்கினார். பின்னர், தோஸ்து முகதுகான் வசம் சென்ற இந்த நகரம் மேலும் அழகான நகரமாக மாறியது. நினைவுச் சின்னங்களும், வரலாற்று பொக்கிஷங்களைக் கொண்ட அரண்மனைகளும் இங்கு ஏராளமாக இருக்கின்றன. 

கோஹர் மஹால் மற்றும் ஷௌகத் மஹால் பார்க்க வேண்டிய இடங்கள். மேலும், எங்கு திரும்பினாலும் மசூதிகள் காணப்படும். அவற்றின் கட்டடக் கலையே உங்களின் கண்களைப் பறிக்கும். இந்தியாவின் மிகப்பெரிய இஸ்லாமிய வழிபாட்டுத் தலமான தாஜ்-உல்-மசாஜித் இங்குதான் உள்ளது. மாலை நேர ஏரிப் பயணம் இங்கு ஸ்பெஷல். அழகான லக்ஷ்மிராயன் கோயில், வான் விஹார்,  வனவிலங்கு பூங்கா, சாஞ்சி ஸ்தூபி, பிம்பேட்கா குகைகள் ஆகியவற்றை காண தவறவிடக்கூடாவதை

2. பாண்டிச்சேரி (pondicherry)

பெரும்பாலான தமிழக இளைஞர்களின் ’லோ பட்ஜெட் கோவா’ என்றால் பாண்டிச்சேரி தான். ஆனால், அங்கு மதுவைத்தவிர ரசிப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. பிரெஞ்சு கவர்னர் டுப்ளெக்ஸ் மற்றும் ஜோன் ஆஃப் ஆர்க் ஆகியோரின் சிலைகள், ஹோட்டல் டி வில்லே (டவுன் ஹால்) போன்ற கட்டிடங்கள் வரலாற்றை பறைசாற்றுபவை. முன்னாள் பிரெஞ்சு ஆளுநரின் இல்லம், பிரெஞ்சு தூதரகம் மற்றும் அலையன்ஸ் ஃபிரான்சைஸ் அலுவலகம், பிரெஞ்சு போர் நினைவுச்சின்னம் ஆகியவற்றை பார்வையிடுங்கள். அரவிந்தோ ஆசிரமம், தனித்துவமான நகரம் ஆரோவில், மாத்ரிமந்திர் ஆகிய இடங்களுக்குச் செல்லுங்கள். அழகான கடற்கரையில் ஆசுவாசமாக நடந்துசென்று, கடல் அழகை ரசியுங்கள். பார்ட்டிக்கும் இடம் உண்டு.

ALSO READ | பாம்பை பாடாய் படுத்தும் சிறுவன், கொதித்தெழுந்த நெட்டிசன்கள்: வீடியோ வைரல்

3. கோவா (GOA)

பகலில் கடற்கரை மணல், இரவில் பார்ட்டிக்கு ஏற்ற, இந்தியாவிலேயே சிறந்த இடம் கோவா. போர்ச்சுக்கீசியர்களின் ஆளுக்கைக்கு கீழ் இருந்தது என்பது, உங்களுக்கு பெரும்பாலும் தெரிந்திருக்கும். பார்க்க வேண்டிய இடங்கள் என்றால், முடிவில்லா கடற்கரை மணல் திட்டுகள், கலங்குட் பகுதி மற்றும் கோல்வா கடற்கரை. பாரம்பரிய தேவாலயங்கள் ஏராளமானவை இருக்கின்றன. அவற்றை பார்க்கலாம். இதற்கடுத்தபடியாக, கஃபேக்கள், உணவகங்கள், பப்கள் மற்றும் இரவு விடுதிகள் ஏராளம். கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. பாக்கெட் வெயிட்டாக இருந்தால், தாராளமாக விடுமுறைக்கு அங்கே செல்லலாம்.

4. கிச்சான் (Kichaan)

கிச்சான் என்பது ராஜஸ்தானின் தார் பாலைவனப் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம். இந்த இடம் ஜோத்பூர், ஜெய்சால்மர் மற்றும் பிகானேர் ஆகிய நன்கு அறியப்பட்ட மூன்று நகரங்களின் மையத்தில் அமைந்துள்ளது. அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில், மங்கோலியாவைச் சேர்ந்த கொக்கு இனங்கள் இமயமலைத் தொடரைக் கடந்து, சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து, இப்பகுதியை வந்தடையும்.  அடுத்த ஆறு மாதங்கள் அங்கேயே இருக்கும். அவற்றைக் காணலாம். 

பல்வேறு பகுதிகளில் இருக்கும் கோட்டைகளை பார்வையிட்ட பிறகு, இங்கு சென்றால் ஒட்டக பயணத்தை தார் பாலவனத்தில் மேற்கொள்ளலாம். பாலைவனத்துக்கு நடுவே குடில் அமைத்து அங்கேயே தங்குவதற்கான வசதிகளும் இருக்கின்றன. இரவு நேர கலை நிகழ்ச்சிகள் அங்கு பிரசித்தி. அங்கும் வாழும் மக்களின் வாழ்க்கை முறையே வித்தியாசமானது. அவர்களின் கதைகளைக் கேட்க, கேட்க ஆர்வம் குறையாது. 

ALSO READ | இனிமே யானையை பார்க்கும்போது இதையெல்லாம் நியாபகத்துல வெச்சுக்கோங்க!

டார்ஜிலிங் (Darjeeling)

இமயமலை என்ற பனிமலையின் உச்சியில் இருக்கும் இடம் டார்ஜிலிங். குளிர்காலம் பிரச்சனை இல்லை என்பவர்கள் இங்கு தாராளமாக செல்லலாம். டார்ஜிலிங் தேயிலை தோட்டங்கள் உங்களை பரவசமாக்கும். அங்கிருந்து இமயமலையின் தொடர்களை பார்க்க முடியும். குறிப்பாக 8,586 மீட்டர் உயரமுள்ள காஞ்செண்ட்சோங்கா மலையில் உள்ள வனப்பகுதிக்கு அருகிலேயே உள்ளது. டைகர் ஹில், மிகவும் பிரபலமானது. அங்கு காலை நேரத்தில் சூரியனின் கதிர்கள் வெள்ளைச் சிகரங்களின் நிறத்தை, கிரிம்சன் சிவப்பு நிறத்தில் இருத்து தங்க மஞ்சள் நிறமாக மாற்றுவதை பார்க்கலாம். பாரம்பரிய ரயில் நிலையம், கோவில்கள், மடங்கள் மற்றும் ஸ்தூபிகள் உள்ளன. மிருகக்காட்சிசாலை  ஒன்றும் உள்ளது. அதில் சிவப்பு பாண்டாக்கள், பனிச்சிறுத்தைகள் மற்றும் திபெத்திய ஓநாய்கள் உள்ளிட்டவற்றைக் காணலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News