Gold Rate Today: தங்க நகை வாங்கப் போறீங்களா? விலை நிலவரம் இதோ!!

சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 21, 2021, 10:31 AM IST
Gold Rate Today: தங்க நகை வாங்கப் போறீங்களா? விலை நிலவரம் இதோ!!  title=

Gold / Silver Rates Today: கடந்த சில நாட்களாக, உலகளாவிய காரணிகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றத்தைக் கண்டு வருகிறோம். எனினும், வரும் காலங்களில் தங்கத்தின் விலையில், ஏறுமுகமே நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள். 

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கார்ட ஆபரணத் தங்கத்தின் விலை (Gold Rate) கிராமுக்கு ரூ. 4,374 ஆக விற்கப்படுகின்றது. 18 காரட் தங்கம் ரூ. 3,583 ஆகவும், 14 காரட் தங்கம் ரூ. 2,838 ஆகவும் விற்பனையில் உள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 63.80 ஆகவும் ஒரு கிலோ வெள்ளி 63,800 ரூபாய்க்கும் விற்பனையில் உள்ளது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை பெரும்பாலும் குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, பெங்களூருவில் 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 43,290 ஆகவும் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 47,220 ஆகவும் உள்ளது. ஹைதராபாத், திருவனந்தபுரம், விசாகப்படினம் ஆகிய நகரங்களிலும் இதே விலை நிலவரம்தான் உள்ளது. 

ALSO READ: Gold Rate Today: இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை, இன்றைய நிலவரம் என்ன?

ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் வெள்ளி விலை (Silver Rate) ரூ. 64,200 ஆகவும் பெங்களூரு மற்றும் திருவனந்தபுரத்தில் ரூ. 59,600 ஆகவும் உள்ளது. 

சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.

இந்தியாவைப் பொறுத்த வரை, பல்வேறு மாநிலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் மாறுபடும். பல்வேறு வரி (Tax) வகைகளைப் பொறுத்து பல்வேறு இடங்களில் விலைகள் மாறுபடுகின்றன. மேலும், செய்கூலி, சேதாரம் ஆகியவற்றின் அடிப்படையிலும், கடைக்கு கடை விலையில் ஏற்ற இறக்கத்தைக் காண முடிகின்றது.

ALSO READ: Gold Hair: அறுவைசிகிச்சை மூலம் தலைமுடியை தங்க முடியாக மாற்றிய பாடகர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News