New Wage Code: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, PF இருப்பில் 66% அதிகரிப்பு விரைவில்

புதிய ஊதியக் குறியீடு எப்போது அமல்படுத்தப்படுகிறதோ, அது தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 11, 2022, 12:25 PM IST
  • புதிய ஊதியக் குறியீடு அமலுக்கு வந்த பிறகு, ​​பிஎஃப் நிதியும் அதிகமாகும்
  • ஊழியர் ஓய்வு பெறும்போது, ​​முன்பை விட அதிகமான பிஎஃப் இருப்பு இருக்கும்.
  • புதிய ஊதியக் குறியீடு அமல்படுத்தப்பட்டால், ஊழியர்கள் கோடீஸ்வரராக ஓய்வு பெறலாம்.
New Wage Code: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, PF இருப்பில் 66% அதிகரிப்பு விரைவில்   title=

New Wage Code/ Provident Fund: புதிய ஊதியக் குறியீடு (The New Wage Code) பற்றிய விவாதம் கடந்த சில மாதங்களாக தீவிரமாக இருந்து வருகிறது. ஊடகங்களில், இது குறித்து அதிக அளவில் எழுதப்பட்டு வருகிறது. 

எனினும், மத்திய அரசிடம் இருந்து இதுவரை முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், புதிய ஊதியக் குறியீடு எப்போது அமல்படுத்தப்படுகிறதோ, அது தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு (New Wage Code Update) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

புதிய ஊதியக் குறியீடு மூலம் நிவாரணம் கிடைக்கும்

புதிய ஊதியக் குறியீட்டில், ஊழியரின் அடிப்படை சம்பளம் அவரது சிடிசியில் 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. இது ஊழியரின் EPF (பணியாளர் வருங்கால வைப்பு நிதி) தொகையையும் பாதிக்கும். ஊழியரும் நிறுவனமும் ஒவ்வொரு மாதமும் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை பி.எஃப்.க்கு வழங்குவார்கள்.

EPFO விதி என்ன சொல்கிறது?

EPFO விதிகளின்படி, நீங்கள் முழு PF தொகையையும் எடுத்தால், அதற்கு வரி விதிக்கப்படாது. எனவே, புதிய ஊதியக் குறியீடு அமலுக்கு வந்த பிறகு, அடிப்படை சம்பளம் 50 சதவீதத்துக்கு மேல் இருந்து, ​​அதில் பிஎப் பங்களிப்பு பிடித்தம் செய்யப்படும் போது, ​​பிஎஃப் நிதியும் அதிகமாகும். அதாவது, ஊழியர் ஓய்வு பெறும்போது, ​​முன்பை விட அதிகமான பிஎஃப் இருப்பு இருக்கும். 

ALSO READ | EPFO: UAN-ஐ எப்படி தெரிந்துகொள்வது? ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு செயல்முறை இதோ 

ஒரு உதாரணத்துடன் அதன் கணக்கீட்டைப் புரிந்துகொள்வோம்.

ஒரு நபரின் வயது 35 ஆக இருந்து, அவரது ஊதியம் மாதம் ரூ.60,000 என்று வைத்துக்கொள்வோம். இவருக்கு வருடாந்திர அதிகரிப்பு 10% என வைத்துக்கொண்டால், தற்போதைய PF-இன் வட்டி விகிதமான 8.5%-ன் படி, ஓய்வு பெறும் போது அந்த நபரின் மொத்த PF தொகை இருப்பு ரூ.1,16,23,849 ஆக இருக்கும்.

கோடீஸ்வரராக ஓய்வு பெறலாம்

அதே சமயம், தற்போதுள்ள EPF பங்களிப்புடன் அதன் PF இருப்பை ஒப்பிடும் போது, ​​ஓய்வுக்குப் பிறகு PF இருப்புத் தொகை ரூ.69,74,309 ஆக இருக்கும். அதாவது, புதிய ஊதிய குறியீட்டு விதியின் மூலம், பழைய நிதியை விட பிஎஃப் இருப்பு குறைந்தது 66% அதிகமாக இருக்கும். அதாவது, புதிய ஊதியக் குறியீடு அமல்படுத்தப்பட்டால், ஊழியர்கள் கோடீஸ்வரராக ஓய்வு பெறலாம். 

கிராஜுவிட்டியும் மாறும்

புதிய ஊதியக் குறியீட்டின்படி, ஊழியர்களின் கிராஜுவிட்டியிலும் மாற்றம் இருக்கும். கிராஜுவிட்டியின் (Gratuity) கணக்கீடு இப்போது பெரிய அடிப்படையில் செய்யப்படும். இதில் அடிப்படை ஊதியத்துடன் பயணப்படி, சிறப்பு கொடுப்பனவு போன்ற பிற கொடுப்பனவுகளும் அடங்கும். இவை அனைத்தும் நிறுவனத்தின் கிராஜுவிட்டி கணக்கில் சேர்க்கப்படும்.

ALSO READ | PF Account வைத்திருப்பவர்களுக்கு சூப்பர் செய்தி: கணக்கில் வந்தது மிகப்பெரிய தொகை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News