HDFC வங்கியில் கணக்கு இருப்பவர்களுக்கு சூப்பர் செய்தி: மிகப்பெரிய நன்மை கிடைக்கும்

Interest Rates: நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ 2 ஆண்டுகளுக்கும் மேலான நிலையான வைப்புகளின் வட்டி விகிதத்தை 10-15 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 17, 2022, 04:18 PM IST
  • HDFC மற்றும் SBI FD வட்டி விகிதங்களை உயர்த்துகின்றன.
  • 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை FD போடலாம்.
  • புதிய கட்டணங்களை இங்கே காணலாம்.
HDFC வங்கியில் கணக்கு இருப்பவர்களுக்கு சூப்பர் செய்தி: மிகப்பெரிய நன்மை கிடைக்கும் title=

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-ஐத் தவிர, நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கியும், பிக்சட் டெபாசிட்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. வங்கி அளித்த தகவலின்படி, எச்டிஎஃப்சி வங்கி, ரூ.2 கோடிக்கும் குறைவான எஃப்டிகளுக்கான வட்டி விகிதத்தை 5-10 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. 

இந்த விலை உயர்வுகள் பிப்ரவரி 14 முதல் அமலுக்கு வந்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ 2 ஆண்டுகளுக்கும் மேலான நிலையான வைப்புகளின் வட்டி விகிதத்தை 10-15 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது.

7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை எஃப்டி போடலாம்

எச்.டி.எஃப்.சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலவரையறைக்கு நிலையான வைப்பு வசதியை வழங்குகிறது. இது தவிர, எச்டிஎஃப்சி வங்கி மூத்த குடிமக்களுக்கு நிலையான வைப்புத்தொகை மீதான கூடுதல் வட்டியையும் வழங்குகிறது.

எச்டிஎஃப்சி வங்கியின் சமீபத்திய எஃப்டி விகிதங்கள்

எச்டிஎஃப்சி வங்கி 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை மெச்யூர் ஆகும் வைப்புகளுக்கு 2.50% முதல் 5.60% வரை வட்டி வழங்குகிறது. எச்டிஎஃப்சி வங்கி மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் எஃப்டி-களுக்கு 3% முதல் 6.35% வரை வட்டி வழங்குகிறது. இந்த விலை உயர்வுகள் பிப்ரவரி 14 முதல் அமலுக்கு வந்துள்ளன.

மேலும் படிக்க | Salary Hike: பணியாளர்களுக்கு வாழ்த்துகள்! அனைவருக்கும் சம்பளம் மிக அதிகமாக உயரப்போகுது! 

எஃப்டி-யின் கால அளவு, வட்டி விகிதம், மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் ஆகிய விவரங்களை இங்கே காணலாம் 

7-14 நாட்கள் - வட்டி விகிதம் - 2.50% முதியவர்களுக்கான வட்டி விகிதம் - 3.00%

15-29 நாட்கள் - வட்டி விகிதம் - 2.50%  முதியவர்களுக்கான வட்டி விகிதம் - 3.00%

30-45 நாட்கள் - வட்டி விகிதம் - 3.00% முதியவர்களுக்கான வட்டி விகிதம் - 3.50%

46-60 நாட்கள் - வட்டி விகிதம் - 3.00% முதியவர்களுக்கான வட்டி விகிதம் - 3.50%

61-90 நாட்கள் - வட்டி விகிதம் - 3.00% முதியவர்களுக்கான வட்டி விகிதம் - 3.50%

91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை - வட்டி விகிதம் - 3.50% முதியவர்களுக்கான வட்டி விகிதம் - 4.00%

6 மாதங்கள் 1 நாள் - 9 மாதங்கள் வரை - வட்டி விகிதம் - 4.40% முதியவர்களுக்கான வட்டி விகிதம் - 4.90%

9 மாதங்கள் 1 நாள் - 1 வருடத்திற்கும் குறைவான காலம் வரை - முதியவர்களுக்கான வட்டி விகிதம் - 4.40% வட்டி விகிதம் - 4.90%

1 ஆண்டு - வட்டி விகிதம் - 5. 0% முதியவர்களுக்கான வட்டி விகிதம் - 5.50%

1 வருடம் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரை - வட்டி விகிதம் - முதியவர்களுக்கான வட்டி விகிதம் - 5.00% 5.50%

2 ஆண்டுகள் 1 நாள் - 3 ஆண்டுகள் வரை - வட்டி விகிதம் - 5.20% முதியவர்களுக்கான வட்டி விகிதம் - 5.70%

3 ஆண்டுகள் 1 நாள் - 5 ஆண்டுகள் வரை - வட்டி விகிதம் - 5.45% முதியவர்களுக்கான வட்டி விகிதம் - 5.90%

5 ஆண்டுகள் 1 நாள் - 10 ஆண்டுகள் வரை - வட்டி விகிதம் - 5.60% முதியவர்களுக்கான வட்டி விகிதம் - 6.35%

எஸ்பிஐ சமீபத்திய எஃப்டி விகிதங்கள்

7 முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஸ்பிஐ எஃப்டி-யில் பொது வாடிக்கையாளர்களுக்கு 2.9% முதல் 5.5% வரை வழங்கப்படும். மூத்த குடிமக்கள் இந்த வைப்புத்தொகையில் கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) பெறுவார்கள். இந்த கட்டணங்கள் 15 பிப்ரவரி 2022 முதல் அமலுக்கு வந்தது.

7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை - 2.9%

46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை - 3.9%

180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை - 4.4%

211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான காலம் - 4.4%

1 வருடம் முதல் 2 வருடங்களுக்கும் குறைவான காலம் - 5.1%

2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை - 5.2%

3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை - 5.45%

5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை - 5.5%

மேலும் படிக்க | ரேஷன் கார்டில் இதை புதுப்பிப்பது மிக அவசியம்: வீட்டில் இருந்தபடியே செய்யலாம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News