குளிர்காலத்தில் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடுவது எப்படி?

Hair Fall Tips: பொதுவாக குளிர்காலத்தில் அதிக பொடுகு தொல்லை ஏற்படுகிறது.  காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பது இதற்கு காரணமாக அமைகிறது.  

Written by - RK Spark | Last Updated : Dec 12, 2023, 06:32 PM IST
  • குளிர்காலத்தில் பொடுகை மோசமாக்குகிறது.
  • குளிர்ந்த காற்று தலையில் ஈரப்பதத்தை இழக்கச் செய்கிறது.
  • அதிக எண்ணெயை பொடுகுத் தொல்லையை அதிகப்படுத்துகிறது.
குளிர்காலத்தில் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடுவது எப்படி? title=

தற்போது குளிர்காலம் வந்துவிட்டது. குளிர்காலத்தில் அதிக விடுமுறைகள், சூடான உணவுகள், சுற்றுலா என பல சிறப்புகள் இருந்தாலும், உடலுக்கு பல்வேறு தீங்குகளை தருகிறது.  அதில் முக்கியமான ஒன்று தலையில் பொடுகு தொல்லை.  குளிர்கால தோலில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும், அது உங்கள் தலைமுடியிலும் பிரதிபலிக்கிறது. இதனால் முடி உலர்ந்ததாகவும், உடையக்கூடியதாகவும், உயிரற்றதாகவும் இருக்கும். இருப்பினும் அதிக செலவு இல்லாமல் முடியை கவனித்துக் கொள்ள சில எளிய வழிகள் உள்ளன. இதனை தினசரி செய்து வந்தால் முடிக்கு பல பயனுள்ள விஷயங்கள் நடக்கும்.  இவை குளிர் காலத்தில் உங்கள் தலைமுடி மென்மையாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், பொடுகு இல்லாமலும் வைத்து இருக்கும். 

மேலும் படிக்க | முடி வேகமாக வளர இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க போதும்

தினசரி தலைக்கு குளிக்க வேண்டாம்

தினமம் தலைக்கு தண்ணீர் விடுவது அதன் இயற்கை எண்ணெய்களை அகற்றி வறட்சியை அதிகரிக்கும். காற்றில் ஈரப்பதம் குறைவது அதை மேலும் மோசமாக்கும். மேலும், குளிர்காலத்தில் தலைமுடியை கழுவுவது ஈரப்பதத்தை அதிகமாக்கி உங்களுக்கு நோய்வாய்ப்படுவதை உறுதிசெய்யலாம்.

ஷாம்பு அல்லது கண்டிஷர்

ஒவ்வொரு முறையும் உங்கள் தலைமுடியை ஷாம்பூ கொண்டு கழுவினால் முடி சீக்கிரம் வறண்டு போகும். தலைக்கு ஈரப்பதத்தை நிரப்புவதற்கான ஒரே வழி, அதை தொடர்ந்து சீரமைப்பதாகும். மேலும் உங்கள் தலைமுடியைக் கழுவ நீங்கள் பயன்படுத்தும் தண்ணீரின் கொதி நிலையை சரியாக பார்த்து கொள்ள வேண்டும்.  வெந்நீர் குளியல் உங்கள் தலைமுடிக்கும், தோலுக்கும் நல்லதல்ல. பொதுவாக வெதுவெதுப்பான நீர் நல்லது என்றாலும் அதிகமாக பயன்படுத்த வேண்டாம். நீங்கள் அதிக வெந்நீரைப் பயன்படுத்தினாலும், ஈரப்பதத்தைத் தக்கவைக்க உங்கள் தலைமுடியை குளிர்ந்த நீரில் ஒரு முறை கழுவவும்.

எலுமிச்சை

நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு உங்கள் தலை முடிக்கு ஏற்றதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள். அதில் பொடுகை சரிசெய்யும் பண்பு உள்ளதா என்பதை பார்த்து கொள்ளுங்கள்.  மேலும், ஒவ்வொரு முறையும் உங்கள் தலைமுடியைக் கழுவும்போது எலுமிச்சை சேர்க்க முயற்சிக்கவும். ஒரு லிட்டர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்த்து, உங்கள் தலைமுடியை நன்கு கழுவவும்.  இது உங்கள் உச்சந்தலையில் பொடுகு இல்லாமல் இருக்கவும், உங்கள் தலைமுடியை பளபளப்பாக மாற்றவும் உதவும்.

வேப்பம்பூ சாறு

வேம்பு உச்சந்தலையை சுத்தம் செய்ய உதவுகிறது மற்றும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. வேப்பம்பூவின் மீளுருவாக்கம் பண்புகள் பொடுகு சிகிச்சைக்கு மிகவும் இன்றியமையாதவை மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. வேப்ப இலை சாற்றை தலையில் தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவினால் பொடுகு தொல்லை நீங்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் வறட்சி மற்றும் வீக்கத்தில் இருந்து பாதுகாக்க செயல்படுகிறது. தேங்காய் எண்ணெய் பாரம்பரியமாக இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. லாரிக் அமிலம் போன்ற இதில் உள்ள முக்கிய பொருட்கள் மஞ்சளின் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் உள்ள நிலைமைகள் மற்றும் பொடுகு போன்ற எரிச்சல்களுக்கு சிகிச்சை அளிக்கும்.

தயிருடன் நெல்லிக்காய்

நெல்லிக்காய் என்று அழைக்கப்படும் ஆம்லா, வைட்டமின் சியின் ஏராளமான மூலமாகும். இது பொடுகுத் தொல்லைக்கு அத்தியாவசியப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. தயிரில் ஈஸ்டை கட்டுக்குள் வைத்திருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை தயிருடன் கலந்து தலையில் தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

மேலும் படிக்க | உங்களுக்கு நீரழிவு நோய் உள்ளதா? இந்த தோல் அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News