Natural Weight Loss Foods: ஆரோக்கியமான உணவு மற்றும் எடை இழப்பு குறிப்புகள் எப்போதும் தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கு மக்களின் முதல் தேர்வாக உள்ளது. 2023ஆம் ஆண்டிலும் உடல் எடையைக் குறைக்கும் பல வகையான பானங்கள், உணவுமுறை மற்றும் இயற்கை உணவுகள் மக்களால் விரும்பப்பட்டன. கடந்த ஆண்டு மக்களை மிகவும் கவர்ந்த அந்த எடை இழப்பு உணவுகள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
பொதுவாக பெரும்பாலனவர்கள் ஏற்கும் கருத்து ஏறக்குறைய சரியானதாக இருக்கும். அந்த வகையில் மிகவும் சக்தி வாய்ந்த எடை குறைக்கும் ஆரோக்கிய வழிமுறையாக இந்த உணவுகள் இருக்கும் என்று நம்பலாம். ஆரோக்கியமும், உடல் எடையும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. எனவே எடை இழப்புக்கு எந்த உணவுகள் சிறந்தது? என்ற கேள்விக்கு இந்த ஐந்து உணவுகள் சரியான பதிலாக இருக்கலாம்.
எடை இழப்புக்கு, உணவின் உதவியுடன் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க முயற்சிப்பது மிகவும் முக்கியமானது என்று கூறப்படுகிறது. வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதோடு, இந்த உணவுகள் கொழுப்பை எரிக்கும் செயல்முறையையும் துரிதப்படுத்துகின்றன.
மூலிகை தேநீர்
கிரீன் டீ எப்பொழுதும் உடல் எடை குறைக்கும் பானமாக உள்ளது. 2023 ஆம் ஆண்டில், கிரீன் டீயுடன், துளசி டீ மற்றும் புதினா டீ போன்ற மூலிகை பானங்களும் மக்களால் விரும்பப்பட்டன.
நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகள்
உணவு நார்ச்சத்து எடை இழப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை மக்கள் இந்த ஆண்டு இணையத்தில் அதிகம் தேடி பயன்படுத்தினார்கள்.
மேலும் படிக்க | தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் சருமம் அழகு மேம்படும், உடல் இளைக்கும்
எலுமிச்சை பானம்
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து உடல் எடையை குறைக்க பலர் முயற்சி செய்கிறார்கள். இந்த பானம் பெரும்பாலும் அனைவராலும் மிகவும் விரும்பப்பட்டது. ஏனென்றால் இந்த பானம், விலை மலிவானது என்பதால் மட்டுமல்ல, உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமல்லாது, பல்வேறு நோய்களையும் போக்கும் சக்திவாய்ந்த பானமாக இருப்பதால், எளியோர் முதல் செல்வந்தர் வரை அனைவருக்கும் உகந்த பானமாக இருக்கிறது எலுமிச்சை பானம்.
குருமிளகு (Black Pepper)
கருப்பு மிளகு எனப்படும் குருமிளகு குளிர்காலத்தில் உடலுக்கு வெப்பத்தை அளிக்கும். தவிர, இதில் உள்ள பாபரைன் என்ற தனிமம் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து கலோரிகளை எரிக்கிறது.
ஓமம் (Carrom Seeds)
செரிமான சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி. வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. தினசரி உணவில் ஓமம் சேர்த்துக் கொள்வது விரைவான எடை இழப்புக்கு மட்டுமல்ல, செரிமானத்தையும் சீர்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | எச்சரிக்கை! நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்யும் ‘சில’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை) மேலும் படிக்க | எச்சரிக்கை! நோய் எதிர்ப்பு சக்தியை காலி செய்யும் ‘சில’ உணவுகள்! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - @ZEETamilNews ட்விட்டர் - @ZeeTamilNews டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: https://bit.ly/3AIMb22 Apple Link: https://apple.co/3yEataJ