இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஹம்பி பற்றி உங்களுக்கு தெரியுமா?

கர்நாடகா மாநிலத்தின் ஹோஸ்பேட் நகரத்திற்கு அருகே உள்ள ஹம்பி எனும் பழமையான கிராமம், சுற்றுலாவிற்கு ஏற்ற இடம் என பிரபல ஆங்கில பத்திரிகை நடத்திய ஆய்வில் பட்டியலிடப்பட்டுள்ளது!

Last Updated : Jan 11, 2019, 04:22 PM IST
இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஹம்பி பற்றி உங்களுக்கு தெரியுமா?

கர்நாடகா மாநிலத்தின் ஹோஸ்பேட் நகரத்திற்கு அருகே உள்ள ஹம்பி எனும் பழமையான கிராமம், சுற்றுலாவிற்கு ஏற்ற இடம் என பிரபல ஆங்கில பத்திரிகை நடத்திய ஆய்வில் பட்டியலிடப்பட்டுள்ளது!

UNESCO-வின் உலக பாரம்பரிய சுற்றுலாதளங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள ஹம்பி, பிரபல ஆங்கில பத்திரிகையான தி நியூயார்க் டைம்ஸ் நடத்திய '2019-ஆம் ஆண்டில் சுற்றலா செல்ல சிறந்த 52 இடங்கள்' என்னும் பட்டியலில் இடம்பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. உலக அளவில் உள்ள சுற்றுலா தளங்களை கொண்டு பட்டியலிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ள ஒரே இடம் ஹம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

ஹம்பியிலுள்ள வினோதமான நிலப்பகுதி உலக மக்களை கவர்ந்துள்ளதால், இப்பகுதிக்கு உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலா பயணிகள் வந்தவணம் உள்ளனர். 

வரலாற்று சிறப்பு மிக்க இந்த இடமானது, 14-வது நூற்றாண்டில் இந்து விஜயநகர பேரரசு தலைநகரமாக செயலாற்றியது குறிப்பிடத்தக்கது. அதன் பெருமை உச்சத்தில் இருந்த போது, துங்கபத்ரா ஆற்றின் அருகே ஒரு பரந்த நலப்பகுதியாக அனைவரையும் வரவேற்றது குறிப்பிடத்தகது. 

பெர்சியா மற்றும் போர்த்துக்கல்லிலிருந்து வர்த்தகர்களை ஈர்த்த இந்தியாவின் பணக்கார நகரமாக இது அக்காலகட்டத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றும்கூட, இது உலகம் முழுவதும் இருந்து இலட்சக்கணக்கான மக்களை வரவேற்றுக்கொண்டு இருக்கிறது. அழகான கோயில்கள், மிகப்பெரிய மற்றும் ஆடம்பரமான அரண்மனைகள், பழங்கால சந்தை வீதிகள், அரச அரண்மனைகள் மற்றும் கருவூல கட்டிடங்கள் ஆகியவற்றின் இடிபாடுகள் மட்டுமே இன்றளவும் உலக மக்களை ஹம்பிக்கு கொண்டுவரும் அற்புதமான சில விஷயங்கள்.

More Stories

Trending News