தந்தையர் தினம்! கூகுள் டூடுல் வெளியிட்டு கவுரவம்!

தந்தையை கவுரவிக்கும் வகையில், கூகுள், சிறப்பு டூடுலை தனது முகப்புப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Last Updated : Jun 17, 2018, 09:23 AM IST
தந்தையர் தினம்! கூகுள் டூடுல் வெளியிட்டு கவுரவம்!

தந்தையை கவுரவிக்கும் வகையில், கூகுள், சிறப்பு டூடுலை தனது முகப்புப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையைக் கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவுவிழாவாகவும் இந்த நாளில் கொண்டாடப்பட்டு  கெளரவிக்கப்படுகிறது. 

தாயின் அன்புக்கு நிகரானது தந்தையின் பாசம். பிள்ளைகளை வளர்ப்பதில் தந்தையரின் பங்கு மகத்தானது. தன் பிள்ளையின் சிரிப்பு, கண்ணீர், மகிழ்ச்சி என அனைத்துத் தருணங்களிலும் பங்கெடுத்துக் கொள்பவர்தான் தந்தை.

இந்நிலையில் இன்று தந்தையர் தினத்தில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை தனது முகப்புப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

More Stories

Trending News