திடீரென தோன்றிய பாம்பை அசால்டாய் விரட்டிய பெண்: அதிசயவைக்கும் வைரல் வீடியோ

Viral Video: பாம்பை கண்டவுடன் பெரும்பாலானவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுவதுண்டு. ஆனால் இந்தப் பெண் அப்படி எதையும் செய்யவில்லை. தண்ணீர் கொண்டு அந்தப் பாம்பை அவர் விரட்டினார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 13, 2024, 03:53 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் mein_memestar என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு 34.5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளும் 9.6 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்ட்களை அளித்து வருகிறார்கள்.
திடீரென தோன்றிய பாம்பை அசால்டாய் விரட்டிய பெண்: அதிசயவைக்கும் வைரல் வீடியோ

Viral Video: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

Add Zee News as a Preferred Source

விலங்குகள் தொடர்பான வீடியோக்களை மக்கள் அதிக ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். அதுவும் பாம்பு வீடியோக்களுக்கென சமூக ஊடகங்களில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்திலும் பாம்பு தொடர்பான ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

ஒரு பெண் அசாத்திய தைரியத்துடன் பாம்பை விரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் வட மாநிலங்களில் சத் பூஜை நடைபெற்றது. அப்பொழுது ஒரு ஆற்றில் பூஜை செய்து கொண்டிருந்த பெண் ஒருவருக்கு பாம்பு ஒன்று தென்பட்டது. ஆனால் அதை கண்டு துளியும் அச்சப்படாமல் அந்த பெண் செய்த செயல் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். பாம்பை கண்டவுடன் பெரும்பாலானவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுவதுண்டு. ஆனால் இந்தப் பெண் அப்படி எதையும் செய்யவில்லை. தண்ணீர் கொண்டு அந்தப் பாம்பை அவர் விரட்டினார்.  இது காண்பதற்கு மிகவும் வித்தியாசமாகவும், அதிசயிக்கும் வகையிலும் உள்ளது. சத் பூஜைக்காக அந்தப் பெண் ஆற்றில் இறங்கி பூஜை செய்து கொண்டிருந்தார். திடீரென்று விஷப்பாம்பு ஒன்று அவர் அருகில் வந்தது. ஆனால், இம்மி அளவும் பயத்தை வெளிப்படுத்தாத அந்த பெண் பாம்பின் மீது தண்ணீர் ஊற்றி அதை விரட்டுகிறார். பெண்ணின் தைரியத்தை பார்த்த அந்த பாம்பும் அவடை ஒன்றும் செய்யாமல் ஓரமாக ஒதுங்கி சென்று விடுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.

மேலும் படிக்க | நாகினி டான்ஸ் ஆடிய நபரை கொத்திய நாகப்பாம்பு... ஆட்டத்தை நிறுத்தாத டான்சர் - வைரல் வீடியோ

பாம்பை தண்ணீர் கொண்டு விரட்டிய பெண்ணின் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mady (@mein_memestar)

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் mein_memestar என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு 34.5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளும் 9.6 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்ட்களை அளித்து வருகிறார்கள்.

'அந்தப் பெண்ணின் துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும்' என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். பெரிய பாம்பு தன்னை நோக்கி வருவதைக் கண்டும் பதட்டப்படாமல் அதை நிதானமாக சமாளிக்கும் பெண்ணின் தைரியத்தை ஒருவர் பாராட்டியுள்ளார். 'பாம்பு கடந்து சென்றவுடன் எந்தவித பதட்டமும் இல்லாமல் அந்த பெண் பூஜையை தொடர்வது ஆச்சரியமான விஷயம்' என்று மற்றொருவர் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க | பூனைக்குட்டி போல 4 சிங்கக்குட்டியுடன் விளையாடும் பெண்! வைரல் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News