மதுரை: தைப்பொங்கல் கொண்டாட்டம் சீரும் சிறப்புமாக நேற்று கொண்டாடப்பட்ட பிறகு, இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் மூன்றாம் நாளான இன்று, பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனப்படும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய கால்நடைகள் குறிப்பாக உழவுக்கும் உணவுக்கும் அடிப்படையான காளைகளுக்கும், பசு மாட்டிற்கும் நன்றி தெரிவிப்பதற்காக கொண்டாடப்படும் திருநாள் இது.
தைப்பொங்கல் திருநாளில் பொங்கல் வைத்து சூரிய பகவான் உள்ளிட்ட இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட அடுத்த நாளான இன்று, கிராமங்களில் மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இன்று, பல கோவில்களில் கோ பூஜை வழி நடத்தி வழிபாடு நடத்தப்படுகிறது.
கோ பூஜை
மாட்டுப்பொங்கல் நாளில் நடைபெறும் கோ பூஜைகளில் கலந்து கொள்வது மகாலட்சுமியின் அருளை பெற்று தரும். மாடு வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் இந்த நாளில் பூஜைகளை செய்வது வழக்கம்.
மாடுகளை சிறப்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே பொங்கல் திருநாளோடு சேர்த்து மாட்டுப் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. மாடுகளை வைத்திருப்பவர்கள், மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை குளிக்க வைத்து, சலங்கை கட்டி, குங்கும பொட்டு வைத்து, அதன் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து, தெய்வமாக நினைத்து பூஜை செய்கின்றனர்.
மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து கோலமிட்டு, பொங்கலை மாட்டிற்கு ஊட்டி மாட்டுப்பொங்கலை கொண்டாடுகிறார்கள். மாடு இல்லாதவர்கள் இந்த நாளில் முன்னோர்களை வழிபடுகினிறனர்.
மேலும் படிக்க | சர்க்கரை நோய் இருப்பவர்கள் சர்க்கரை பொங்கல் சாப்பிடலாமா?
மாட்டுப் பொங்கல்
உழவுக்கு உயிரூட்டும் காளைகளையும், உழவுப் பொருட்களையும் இந்நாளில் அலங்கரித்து, வழிபடுவது தமிழர்களின் பாரம்பரிய மரபாக இருந்து வருகிறது. அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையின்போது, உழவுக்காக பயன்படுத்திய உபகரணங்களையும் சுத்தம் செய்து அவற்றையும் பராமரிக்கும் நாள் இது.
மாட்டுப் பொங்கல் தினத்தன்று, மாடுகளுக்கு புது கயிறுகளை மாட்டி, கொம்புகளை சீவி புது வர்ணம் பூசி, சந்தனம், குங்குமத்தால் பொட்டு வைத்து, மாலை அணிவித்து அவற்றை தெய்வமாக நினைத்து வழிபடுவது மரபு.
பொங்கல் வைப்பவர்கள் பொங்கல் பொங்கிய பிறகு, கால்நடைகளுக்கு தீபாரதணைக் காட்டி, அவற்றுக்கு பொங்கல், பழத்தைக் கொடுப்பார்கள். இன்று, காலை 07.30 - 09.00 மற்றும் காலை 10.30 - 12.00 மணி வரை மாட்டுப் பொங்கலுக்கு பொங்கல் வைக்கலாம்.
மேலும் படிக்க | அவனியாபுரம்; பொறி பறக்கும் ஜல்லிக்கட்டு; சீறும் காளைகள் - அடக்கும் காளையர்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ